ETV Bharat / state

ஏமாற்றியதாக அளித்தப் புகாரை திரும்பப் பெறக்கோரி மிரட்டல்.. ஐடி ஊழியர் மீது நடிகை லுப்னா புகார் - ஏமாற்றியதாக அளித்த புகாரை திரும்பப் பெற மிரட்டல்

திருமண செயலி மூலம் ஏமாற்றியதாக அளித்த புகாரில், ஐடி ஊழியர் கைதான நிலையில, அப்புகாரை திரும்பப் பெறக்கோரி மிரட்டுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை லுப்னா அமீர் புகார் அளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 16, 2023, 4:31 PM IST

சென்னை: திருமண செயலி மூலம் ஏமாற்றியதாக அளித்த புகாரை திரும்பப் பெறக்கோரி, ஐடி ஊழியரும் அவரது மனைவியும் மிரட்டுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் லூப்னா அமீர் புகார் அளித்துள்ளார். இதனிடையே, இந்தியாவால் தடை செய்யப்பட்ட செயலியில் ஆபாச வேலை பார்ப்பதாகவும், தன்னோடு இருக்கும் ஆபாச புகைப்படத்தை வைத்து மிரட்டுவதாகவும் ஐடி ஊழியரான மசியுல்லாகான் நடிகை லூப்னா அமீர் மீது குற்றஞ்சாட்டி பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

’கேக்கிறான் மேய்க்கிறான்’ என்ற தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் 'லூப்னா அமீர்'. இவர் பல்வேறு வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். இவர் திருமணத்திற்காக தனியார் செயலி மூலம் வரன் பார்த்து வந்துள்ளார். அப்போது ஒரு செயலி மூலமாக வியாசர்பாடியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியும், ஐடி ஊழியருமான 'மசியுல்லாகான்' என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறி, சில நாட்கள் பழகியுள்ளனர். அப்போது மசியுல்லாகானுக்கு ஏற்கனவே, திருமணம் ஆனதை மறைத்து மீண்டும் திருமணம் செய்ய முயற்சித்ததால் அவரை விட்டு விலகியதாகவும் நடிகை லுப்னா தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மசியுல்லாகான் தன்னோடு எடுத்துக்கொண்ட தனிப்பட்ட புகைப்படத்தை பயன்படுத்தி மிரட்டியதாக திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில், மசியுல்லாகான் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், தான் கொடுத்தப் புகாரை வாபஸ் பெறுவதற்காக அவரது மனைவியுடன் சேர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக பெரவள்ளூர், வேலூர், வாணியம்பாடி ஆகிய காவல் நிலையங்களில் தன் மீது பொய்யான புகாரை அளித்து தொந்தரவு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மசியுல்லாகான் கடந்த ஏப்ரல் மாதம் தன்மீது கொடுத்தப் புகாரின் அடிப்படையில், முறையாக விசாரிக்காமல் பெரவள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், தொடர்ந்து தன்னைப் பற்றி அவதூறு பரப்பும் வகையிலும், மிரட்டும் வகையிலும் செயல்படும் ஐடி ஊழியரான மசியுல்லாகான் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை லூப்னா இன்று (மே 16) புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் குறித்து திருவல்லிக்கேணி துணை ஆணையர் விசாரிக்கும்படி அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் குற்றச்சாட்டிற்கு உள்ளான மசியுல்லாகான் தரப்பில் விசாரித்த போது, தனது மனைவியிடம் கருத்து வேறுபாடு காரணமாக 2020ஆம் ஆண்டு பிரிந்து வந்துவிட்டதாகவும், விவாகரத்து செய்ய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், மீண்டும் திருமணம் செய்துகொள்வதற்காக திருமண செயலி மூலம் விண்ணப்பித்தபோது, நடிகை லுப்னா பழக்கமானதாகவும், தன்னிடமிருந்து பழகும் காலத்தில் செலவிற்காக பணம் அதிகளவு வாங்கி செலவழித்ததாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் நடிகை லுப்னா இந்தியாவால் தடை செய்யப்பட்ட செயலி மூலம் ஆபாச வீடியோ பதிவிட்டு சம்பாதிக்கும் வேலையை செய்வதாக தெரிய வந்ததை அடுத்து, பழகுவதை நிறுத்திக் கொண்டதாகக் கூறியுள்ளார். இருப்பினும், தன்னோடு இருக்கும் ஆபாச புகைப்படங்களை வைத்து மிரட்டுவது நடிகை லூப்னா தான் என்றும், இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறும் போது, தன்னை தாக்கியதாக கொடுத்த புகாரிலேயே பெரவள்ளூர் போலீசார் நடிகை மற்றும் நடிகையின் அடியாட்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

திருமண செயலி மூலம் பழக்கமான நடிகை மற்றும் ஐடி ஊழியர் மசியுல்லாகான் மாறிமாறி ஒருவர் மீது ஒருவர் புகார் அளிக்கப்பட்ட வழக்கு என்பது காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இருவரில் யார், யாரை ஏமாற்றினார்கள்? என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு எழுந்துள்ளது. இந்நிலையில், நடிகை மீண்டும் புகார் அளித்ததை அடுத்து ஏமாற்றியது நடிகையா? அல்லது ஐடி ஊழியரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: The Kerala Story box office Collection: பாக்ஸ் ஆபிஸ் அதிக வசூல் படங்களின் வரிசையில் "தி கேரளா ஸ்டோரி"!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.