இயக்குநர் சுசி கணேசன் இயக்கத்தில், மணிரத்னம் தயாரிப்பில் வெளியான '5 ஸ்டார்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கனிகா.
மிஸ் சென்னை கனிகா:
1982ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி மதுரையில் பிறந்த கனிகா, டிவிஎஸ் பள்ளியில் படித்தார். பின்னர், மேல் படிப்பிற்காக ராஜஸ்தான் சென்றார்.
டப்பிங், பாடகி, டிவி தொகுப்பாளினி எனப் பல திறமைகளைக் கொண்டவர். மிஸ் சென்னை போட்டியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தவர்.
இதையடுத்து, இவரது புகைப்படங்கள் பத்திரிகையில் வெளியானதையடுத்து கனிகாவுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
பிறந்தநாள் வாழ்த்துகள்:
கனிகா தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது விக்ரம் நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் கோப்ரா படத்திலும் நடித்துள்ளார்.
தனது சிறந்த நடிப்பாலும், வித்தியாசமான கதாபாத்திரங்களாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பித்த கனிகாவின் 39ஆவது பிறந்தநாளை இன்று அவர் தனது குடும்பத்தாருடன் கொண்டாடி வருகிறார்.
மேலும், அவருக்கு திரை துறை நண்பர்கள், நடிகர்கள், ரசிகர்கள் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஃபேர் & லவ்லி நடிகைக்கு அமலாக்கத் துறை சம்மன்!