சென்னை: துஷாரா விஜயன் பா. ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானார். அதன் பிறகு அதே பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரங்கள் நகர்கிறது படத்தின் மூலம் இன்னும் ரசிகர்கள்களின் மனதை கொள்ளையடித்தார்.
தற்போது அருள்நிதிக்கு ஜோடியாக அவர் கதாநாயகியாக நடித்துள்ள ‘கழுவேத்தி மூர்க்கன்’ படம் இன்று (மே 26) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 'துஷாரா விஜயன்' இப்படம் தனக்கு மற்றுமொரு நம்பிக்கைக்குரிய ஒன்றாக இருக்கும் என பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் தனது கதாபாத்திரம் மற்றும் பட குழுவுடன் பணிபுரிந்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடிகை 'துஷாரா விஜயன்' கூறும்போது, "எனது படங்கள் தேர்வு குறித்து எப்போதுமே நான் கவனமாக இருப்பேன். அதில் என்னுடைய கதாபாத்திரம் எளிதில் என்னுடன் கனெக்ட் ஆக வேண்டும். 'கழுவேத்தி மூர்க்கன்' கவிதா என் மனதிற்கு நெருக்கமாக நான் உணர்ந்தேன் அப்படிப்பட்ட ஒரு பாத்திரம் தான் கவிதா.
திண்டுக்கல்லில் உள்ள ஒரு வழக்கமான கிராமத்து பெண். நான் அதே பின்னணியில் இருந்து வந்ததால், இந்த கேரக்டரை செய்வது எளிதாக இருந்தது. அவள் அப்பாவித்தனம் கொண்ட ஒரு பெண். இந்தத் திரைப்படத்திற்குப் பிறகும் பார்வையாளர்கள் அவளை நினைவில் வைத்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: "என்னை ரசித்து, ரசித்து செதுக்கியுள்ளார் முத்தையா"- இயக்குநரை புகழ்ந்து தள்ளிய நடிகர் ஆர்யா!
நடிகர் அருள்நிதியுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், "அருள்நிதி ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகர் மற்றும் சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார். பொதுவாக, அவரது படங்களில் காதல் காட்சிகள் பெரிதாக இருக்காது. ஆனால், இந்தப் படத்தில் எனக்கும் அருள்நிதிக்கும் இடையிலான சில அழகான காட்சிகளை இயக்குநர் கௌதம ராஜ் கொடுத்துள்ளார்" என்றார்.
அருள்நிதி மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த், சரத்லோகித் சாவா, ராஜ சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'கழுவேத்தி மூர்க்கன்' படத்தை சை கௌதம ராஜ் (ஜோதிகாவின் 'ராட்சசி' புகழ்) எழுதி இயக்கியுள்ளார். ஒலிம்பியா பிக்சர்ஸ் எஸ். அம்பேத் குமார் தயாரித்துள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு மற்றும் இசை டி.இமான். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் யுகபாரதி (பாடல் வரிகள்), நாகூரன் (எடிட்டர்), மகேந்திரா (கலை இயக்குநர்), தினா (நடன இயக்குநர்), கணேஷ் (ஸ்டன்ட்), அன்பு (ஸ்டில்ஸ்), சுபீர் ஆர் (ஆடைகள்). இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: Pushpa-2 Release : புஷ்பா-2 ரிலீஸ் எப்போது? லீக்கான ருசிகர தகவல்!