சென்னை பூந்தமல்லி அருகே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து நசரத்பேட்டை காவலர்கள் அவரது கணவர் ஹேம்நாத், சித்ராவின் பெற்றோர், கடைசியாக படப்பிடிப்பில் கலந்துகொண்டவர்கள், ஹேம்நாத்தின் பெற்றோர் என பல தரப்பிலும் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
ஹேம்நாத்திடம் மட்டும் தொடர்ந்து ஆறு நாட்களாக காவலர்கள் விசாரணை மேற்கொண்டதில், பல முன்னுக்கு பின் முரணான தகவல்களை அவர் கொடுத்ததாக தெரிகிறது. சித்ரா மற்றும் ஹேம்நாத்தின் செல்போன்களில் பதிவான தகவல்களை வைத்து காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
இதன் அடிப்படையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத்தை அதிரடியாக கைது செய்த காவலர்கள், பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சித்ராவின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் தனிப்பிரிவில் அவரது பெற்றோர் மனு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க:மன அழுத்தம் காரணமாக சித்ரா தற்கொலை செய்து கொண்டார் - மாமனார் ரவிச்சந்திரன்