சென்னையில் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் ஒய். ஜி மகேந்திரன் பேசுகையில், தமிழ்நாட்டில் பல்பொடி சரி இல்லையென்றால் கூட போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
வள்ளுவர் கோட்டத்தில் போராட்டங்களை நடத்தி வள்ளுவரை சாகடிக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களில் 25 விழுக்காடு மாணவர்கள் அதுகுறித்த அறிவுடன் போராடுகின்றனர். மீதமுள்ள 75 விழுக்காடு மாணவர்கள் விடுமுறை கிடைக்கவும், கலாட்டா செய்யவும், பெண்களை சைட் அடிப்பதற்காகவும் செல்கின்றனர். ஆனால் படிக்கும் மாணவர்களுக்கு இது தேவை இல்லாதது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். ஏதாவது குறைகள் இருந்தால் அதை நியாயமான முறையில் கேட்கவேண்டும்.
மேலும், கல் எறிவது, பேருந்துகளை எரிப்பது, கலவரம் செய்து, பொதுசொத்துகளை சேதம் விளைவிப்பதாக இருக்கக் கூடாது என்றார்.
இதையும் படிங்க: