ETV Bharat / state

நடிகர் விஜய் பிறந்தநாள்: குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு.. விஜய் ரசிகர்களின் வேற லெவல் கொண்டாட்டம்! - cinema news

விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பாக இலவசமாக தங்க மோதிரம் மற்றும் பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது.

vijay makkal iyakkam
விஜய் மக்கள் இயக்கம்
author img

By

Published : Jun 22, 2023, 10:51 PM IST

தங்க மோதிரம் பரிசாக வழங்கிய விஜய் ரசிகர்கள்

சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராகத் திகழ்பவர் நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாவில் நடிப்பு, ஆக்‌ஷன், டயலாக் டெலிவரி மற்றும் நடனம் ஆகியவற்றுள் தனக்கென்று தனித்துவமான நடிப்பைக் கொண்டு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவரது படங்கள் வெளியாகும் நாட்களில் ரசிகர்கள் திரையரங்குகளை திருவிழா போல் அலங்கரித்துக் கொண்டாடுவர்.

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராகத் திகழும் விஜய், தற்போது படத்தின் வசூலிலும் சக்கரவர்த்தியாக திகழ்கிறார் என்றால் அது மிகையாகாது. தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணியளவில் லியோ படத்தின் முதல் பார்வை புகைப்படத்தை நடிகர் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

கடந்த வாரம் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 'விஜயின் கல்வி விருது' வழங்கும் விழா நடைப்பெற்றது. மேலும், நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

திருப்பத்தூர்: அந்த வகையில் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு, திருப்பத்தூர் மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் சார்பில் தங்க மோதிரம் மற்றும் பரிசுகள் அடங்கிய பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் விஜய் மக்கள் இயக்கத்தின் நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

திண்டுக்கல்: அதேபோல் பழனியில் இன்று விஜய் மக்கள் இயக்கம் இளைஞரணி சார்பில் நகர தலைவர் மிதுன் மனோகர் தலைமையில் பழனி அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணிக்குள் பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கபட்டன. இச்சம்பவம் அப்பகுதி மக்களுக்கு நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மக்கள் இயக்க நிர்வாகிகள் சார்பில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யபட்டன. இதனைத்தொடர்ந்து இலவசமாக இன்று முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கபட்டது.

மயிலாடுதுறை: மேலும், மயிலாடுதுறை விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து அழகு பார்த்தனர் மக்கள் இயக்கத்தினர். அப்போது ஆண் குழந்தை ஒன்றுக்கு 'விஜய்' என விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் குட்டி கோபி பெயர் சூட்டினார். இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்கள் 500 பேருக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்.

இதனிடையே, மாலை 6.30 மணி அளவில் லியோ படத்தின் முதல் பாடல் வெளியானது. இந்தப் பாடலை விஜய் மற்றும் அசல் கோலார் ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படாலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க:"நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால், கூட்டணிக்கு அழைப்போம்" - நயினார் நாகேந்திரன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.