விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்று இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இவரது அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே சென்னை அருகே பனையூரில் அமைந்துள்ள விஜயின் இல்லத்தில், மக்கள் இயக்க நிர்வாகிகளை வரவழைத்து தீவிர ஆலோசனையில் விஜய் ஈடுபட்டிருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இந்தச் சந்திப்பு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
![விஜய்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9442671_riza.jpg)
இந்நிலையில், விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கியுள்ளதாகவும் விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாறி கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் விஜய் பதிவு செய்தார் எனவும் தகவல்கள் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.
![விஜய்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9442671_diamond-babu.jpg)
இந்த செய்தி வதந்தி என விஜய்க்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது குறித்து விஜய் தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.