ETV Bharat / state

அரசியலுக்கு ஆயத்தமாகிறாரா நடிகர் விஜய்? - மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை - chennai latest news

சென்னை: இன்று சென்னை அருகே உள்ள பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார்.

actor-vijay-consults-with-his-vmi-executives

author img

By

Published : Oct 24, 2020, 10:38 AM IST

Updated : Oct 24, 2020, 11:07 AM IST

விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்று இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று சென்னை அருகே உள்ள பனையூர் இல்லத்தில் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசானைக் கூட்டத்தில் மக்கள் இயக்கத்தை வலுபடுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். விரைவில் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட பிற மாவட்ட நிர்வாகிகளையும் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதையும் படிங்க:

நடிகர் கவுண்டமணி உடல்நிலை குறித்த போலி செய்தி; ஆன்லைன் மூலம் புகார்!

Last Updated : Oct 24, 2020, 11:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.