ETV Bharat / state

Good Night Movie:குட் நைட் படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா பாராட்டு! - tamil news

அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்திலும் நடிகர் மணிகண்டன் நடிப்பிலும் உருவாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'குட் நைட்' திரைப்பட படக்குழுக்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார்.

குட் நைட் படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா பாராட்டு!..

author img

By

Published : May 14, 2023, 8:08 AM IST

சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் குறிப்பிடத்தக்கவர் நடிகர் மணிகண்டன். இவர் நடிகர் மட்டுமின்றி வசனகர்த்தாவும் கூட. திரையில் வெளியான பல படங்களுக்கு இவர் வசனங்கள் எழுதியுள்ளார். மேலும், புஷ்கர் காயத்திரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா படத்துக்கு இவர்தான் வசனம் எழுதியவர். நடிகராகத் திரையுலகில் இந்தியா பாக்கிஸ்தான், காதலும் கடந்து போகும், பாவ கதைகள் போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர், ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தில் ராஜா கண்ணுவாக நடித்ததன்‌ மூலம் தனக்கென தனி இடம் பிடித்தார்.

அதுமட்டுமின்றி, அஜித் நடித்த விஸ்வாசம் படத்திலும் பணிபுரிந்துள்ளார்.‌ இவரது சில்லு கருப்பட்டி படத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும், இவர் நரை எழுதும் சுயசரிதம் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இப்படி நடிகர், உதவி இயக்குநர், வசனகர்த்தா என தனது திறமையை எல்லா துறைகளிலும் வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் இவர், தனித்திறமைகளில் ஒன்றான மிமிக்ரியிலும் கலக்குபவர். சமீபத்தில் இவர் தனியார் தொலைக்காட்சியில் பங்கேற்ற போது பேசிய மிமிக்ரி வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜெய்பீம், காதலும் கடந்து போகும், ஏலே போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர், கூடிய சீக்கிரம் படம் இயக்க உள்ளார்.

இந்நிலையில், இவர் நடிப்பில் தற்போது வெளியாகிய குட் நைட் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் குறட்டை பிரச்சினையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஐ.டி தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியரின் குறட்டை பிரச்சனையை, இரண்டரை மணி நேர இயல்பான கதைக்களம் மற்றும் நடிகர்களின் தேர்ந்த நடிப்பில் காட்டியுள்ளதால், படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள் பலரும் படத்தில் நடித்த அனைவரையும் பாராட்டி வருகின்றனர். மேலும், இப்படத்தில் நாய் உட்பட நன்றாக நடித்துள்ளது.

இந்த நிலையில், நடிகர் சூர்யா படத்திற்காக உழைத்த நடிகர் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்டோரைப் பாராட்டியுள்ளார். சூர்யாவின் ஜெய்பீம் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக மணிகண்டன் நடித்திருந்தார். எனவே, நட்பின் அடிப்படையில் நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆர்யா நடிக்கும் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.