சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சிவகார்த்திகேயன், உக்ரைன் நாயகி மரியா ரியாபோஷப்கா மற்றும் சத்யராஜ் நடிப்பில், தெலுங்கு திரையுலகின் இளம் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில், தீபாவளிக்கு வெளியான திரைப்படம் 'பிரின்ஸ்'.
இந்த படம் வெற்றி பெறவில்லை. படத்தில் இருந்த காமெடி காட்சிகளும் ரசிகர்களை சோதித்தது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதற்கு சிவகார்த்திகேயன் மனதளவில் மிகவும் வேதனை அடைந்தார். இதுமட்டுமின்றி படத்தை விநியோகம் செய்த விநியோகஸ்தர்கள் பலருக்கும் மிகப் பெரிய பண இழப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து பிரின்ஸ் படத்தால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு இழப்பீடு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் ரூ.3 கோடி மற்றும் தயாரிப்பாளர் ரூ.3 கோடி சேர்த்து மொத்தம் ரூ.6 கோடி இழப்பீடு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 'துணிவு' ரிலீஸ் தேதி எப்போது? குழப்பத்தில் அஜித் ரசிகர்கள்!