ETV Bharat / state

சாய்னா நேவால் விவகாரம்: போலீசிடம் சித்தார்த் மன்னிப்பு - siddharth asks sorry to chennai police

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து அவதூறாக ட்விட்டரில் பதிவிட்டதாக தேசிய மகளிர் ஆணையம் நடிகர் சித்தார்த் மீது புகார் அளித்திருந்தனர். இது குறித்த விசாரணையின் போது சென்னை காவல்துறையிடம் சித்தார்த் மன்னிப்பு கேட்டுள்ளார்.

சாய்னா குறித்த ட்விட்டர் விவகாரம்; போலிசிடம் மன்னிப்பு கேட்ட சித்தார்த்

author img

By

Published : Feb 5, 2022, 10:49 AM IST

சென்னை: பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பிரபல பெண் ஊடகவியலாளர் ஆகியோர் குறித்து ட்விட்டரில் அவதூறான கருத்துகளை தெரிவித்த நடிகர் சித்தார்த்திடம் விசாரணை நடத்துமாறு தேசிய மகளிர் ஆணையம் சென்னை காவல்துறையிடம் புகார் அளித்திருந்தது

இதுதொடர்பாக கடந்த ஜனவரி 10ஆம் தேதி சித்தார்த்துக்கு சென்னை காவல் துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக காணொலிக் காட்சி மூலமாக வாக்குமூலம் அளித்த நடிகர் சித்தார்த், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்ததற்கும், பெண் ஊடகவியலாளரை அவதூறாக பேசிய விவகாரத்திலும் மன்னிப்பு கேட்பதாக தன்னுடைய வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாக சென்னை மாநகர காவல் துறையினர் தெரிவித்தனர்.

ட்விட்டரிலும் மன்னிப்பு

முன்னதாக, சமூக வலைதளத்தில் தான் பதிவிட்ட கருத்துக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் நடிகர் சித்தார்த் ட்விட்டரில் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.

இரண்டு புகார்கள் தொடர்பாகவும் நடிகர் சித்தார்த்தின் வாக்குமூலத்தை தேசிய மகளிர் ஆணையத்திற்கு சென்னை மாநகர காவல் துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: தீபிகா குறித்து கேள்வி; பத்திரிகையாளரை விளாசிய கங்கனா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.