ETV Bharat / state

பிரபல மாலில் அதிக அபராத கட்டணம் வசூல்.. நடிகர் ஹூசைனி பகீர் குற்றச்சாட்டு! - Badri

சென்னையில் உள்ள பிரபல மாலில் அதிகப்படியாக அபராதக் கட்டணம் வசூலிப்பதாக, திரைப்பட நடிகர் ஷிகான் ஹூசைனி புகார் தெரிவித்துள்ளார்.

பிரபல மாலில் அதிக அபராதக் கட்டணம் வசூல்.. ‘பத்ரி’ நடிகர் பகீர் குற்றச்சாட்டு

author img

By

Published : May 9, 2023, 1:16 PM IST

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மாலில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு (Parking) கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், வாராந்திர நாட்களில் முதல் இரண்டு மணி நேரம் 60 ரூபாயும், அதற்கடுத்த ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 30 ரூபாய் என நிர்ணயித்துள்ளனர்.

அதேபோல், வார இறுதி நாட்களில் முதல் ஒரு மணி நேரம் 80 ரூபாயும், இரண்டாவது மணி நேரம் 40 ரூபாயும், அதற்கடுத்த ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 40 ரூபாய் என்ற அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவேளை இந்த பார்க்கிங் டிக்கெட்டை தொலைத்தால் 340 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய் நடித்த ‘பத்ரி’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவரும், தற்காப்பு கலை நிபுணரும், தமிழ்நாடு ஆர்சேரி அஷோசியேஷன் பொதுச் செயலாளருமான ஷிகான் ஹூசைனி, நேற்று (மே 8) இந்த மாலில் கொடுக்கப்பட்ட பார்க்கிங் டிக்கெட்டை தொலைத்துள்ளார். இதனால் 340 ரூபாய் செலுத்த வேண்டும் என மால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே காரை அனுமதிக்க முடியும் எனவும் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட காரணத்தால், ஷிகான் ஹூசைனி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், மால் ஊழியர்களை எச்சரித்துள்ளனர். அப்போது, அதிகப்படியான கட்டணங்களை வசூல் செய்வதற்கு அதிகாரம் யார் கொடுத்தது எனவும் காவல் துறையினர் கேள்வி எழுப்பி உள்ளனர். இதன் பிறகு மாலில் பணிபுரியும் உயர் அலுவலர்கள், பார்க்கிங் கட்டணம் மட்டுமே வசூல் செய்து அனுப்பியதாக தெரிவித்துள்ளனர்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இந்த நிலையில், புகார் அளித்த உடன் உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல் துறைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஷிகான் ஹூசைனி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். மேலும், மால் நிர்வாகம் உடனடியாக இது போன்ற சட்டவிரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: விஜய்யை இயக்க மறுத்த பாரதிராஜா - எஸ்.ஏ.சந்திரசேகர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.