ETV Bharat / state

"நட்பின் இலக்கணம் நண்பர் விஜயகாந்த்" - நேரில் அஞ்சலி செலுத்திய பிறகு கண்ணீர் சிந்திய ரஜினிகாந்த்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 29, 2023, 11:14 AM IST

Updated : Dec 29, 2023, 8:26 PM IST

Rajinikanth pays tribute to Vijayakanth: 'நட்பின் இலக்கணம் ஆவார். அவருடன் ஒரு முறைபழகிவிட்டால், அவரின் அன்புக்கு அடிமையாகி விடுவோம்' என விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலில் செலுத்தி விட்டு செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டினார்.

Rajinikanth pays tribute to Vijayakanth
Rajinikanth pays tribute to Vijayakanth

நட்பின் இலக்கணம் நண்பர் விஜயகாந்த் என ரஜினிகாந்த் உருக்கம்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று (டிச.28) காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவையடுத்து சில மணி நேரம் சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடல் அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் குவிந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். பின்னர், இரவு வரை அங்கே பல்வேறு பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, இன்று (டிச.29) அதிகாலை சுமார் 6:00 மணியளவில் சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில், அலைகடலென ரசிகர்களும், திரளான பொதுமக்களும் இங்கு வந்து நடிகர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்த் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது விஜயகாந்தின் இழப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், "அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்கள் மறைந்தது மிகப்பெரிய துரதிஷ்டம். அவர் அசாத்தியமான மன உறுதி உள்ள மனிதர். எப்படியும் அவர் உடல்நிலை தேறி வந்து விடுவார் என்று அனைவரும் நினைத்தோம். ஆனால், தேமுதிக பொதுக்குழுவில் அவரைப் பார்க்கும் போது எனக்கு உறுதி கொஞ்சம் குறைந்து விட்டது அவர் இறந்தை செய்தியை அறிந்த நான் என் மனம் மிகவும் வேதனை அடைந்தது. அவர் எப்போது அனைவரிடமும் நல்ல முறையில் அனுகுபவர் ஆவார்.

அவர் நட்பின் இலக்கணம் ஆவார். அவருடன் ஒரு முறைபழகிவிட்டால், அவரின் அன்புக்கு அடிமையாகி விடுவோம். அவர் அனைவரும் மேல் கோபம் படுவார். ஆனால் யாருக்கும் விஜயகாந்த் மேல் கோபம் வராது. அவரின் கோபத்தின் பின்னால், காரணம் இருக்கும்; சுயநலம் இருக்காது. ஒருமுறை நான் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டபோது, என் அருகில் இருந்து பார்த்துக்கொண்டார்.

சிங்கப்பூர், மலேசியா, நடிகர் சங்க விழாக்களில் ரசிகர்கள் எண்ணை சுழ்ந்துவிடுவார்கள். ஆனால், அவர் தனியாக என்னை பத்திரமாக அழைத்துவருவார். வாழ்ந்தவர் கோடி , மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் விஜயகாந்த்" என கண்ணீர் மல்க வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார்' - ரஜினிகாந்த் விஜயகாந்த் குறித்து உருக்கம்

Last Updated : Dec 29, 2023, 8:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.