சென்னை: நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவின் பன்முகத் தன்மை கொண்ட கலைஞனாக உள்ளவர் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்சின் முனி, காஞ்சனா போன்ற திரைப்படங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படி செய்தது.
சினிமாவைத் தாண்டி மக்கள் மத்தியில் அவர் பிரபலமாக அறியப்பட மற்றொரு காரணம் அவரின் உதவி செய்யும் குணம் தான். குறிப்பாக மாற்றுத்திறனாளி மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அவர் தொடர்ந்து உதவி செய்து வருகிறார். அவர்களுக்கென்று தனியாக இல்லங்கள் நடத்தி வருவதோடு அவர்களை கனிவோடு கவனித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்சின் சமூக சேவைகளை கௌரவிக்கும் விதமாக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் இணைந்து அவருக்கு இந்த விருதை வழங்கியுள்ளனர்.
ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் படப்பிடிப்பில் இருப்பதால் டாக்டர் பட்டத்தை அவரது தாயார் பெற்றுக் கொண்டார். டாக்டர் பட்டம் பெற்றுள்ள ராகவா லாரன்ஸ்க்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:2 கோடி பார்வையாளர்களை கடந்த பொன்னியின் செல்வன் டீஸர்...