சென்னை: பிரசாந்த் நீல், இந்தப் பெயரை கேட்டாலே இவர் யார் என்பதை எந்த மொழி சினிமா ரசிகனைக் கேட்டாலும் சொல்லிவிடுவார்கள். இதற்குக் காரணம் இவர் இயக்கிய கேஜிஎப் திரைப்படம் தான். இப்படத்தின் மூலம் நடிகர் யாஷ் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே கைப்பற்றினார். கேஜிஎப்-யின் இரண்டு பாகமுமே அசுர வெற்றியைப் பெற்றது. முக்கியமாக இந்திய அளவில் சுமார் ரூ.1,200 கோடி வரை வசூல் செய்தது.
இந்நிலையில் இவர் தற்போது நடிகர் பிரபாஸை வைத்து இயக்கியுள்ள படம், சலார். இப்படத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ளார். கேஜிஎப் படத்தைத் தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது. மேலும், இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். பிரபாஸுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மலையாள நடிகரான பிருத்வி ராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: ‘சினிமாவிற்குள் சாதியைக் கலக்காதீர்கள்’ - இயக்குநர் பேரரசு ஆவேசம்!
பாகுபலிக்கு பிறகு, பெரிய அளவில் வெற்றி காணாத நடிகர் பிரபாஸ் இப்படத்தின் மூலம் மீண்டும் ப்ளாக் பஸ்டர் என்ட்ரி கொடுப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. 'சலார்' படம் வருகிற செப்டம்பர் மாதம் 28ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டீஸர் இன்று காலை வெளியாகியுள்ளது. பொதுவாக டீஸர் அல்லது ட்ரெய்லர் என்றால் நள்ளிரவு 12 மணிக்கோ அல்லது மாலை நேரத்திலோ வெளியிடுவார்கள். ஆனால் இப்படத்தின் டீஸர் அதிகாலை 5.12 மணிக்கு வெளியிடப்பட்டது.
மேலும் சலார் பகுதி 1 : சீஸ் ஃபயர் என்பது பிரபல இயக்குநர் பிரசாத் நீல் மற்றும் பிரபாஸ் ஆகியோரின் கனவு கூட்டணியை முதன்முறையாக ஒன்றிணைக்கும் இந்திய அளவிலான திரைப்படமாக அமைந்துள்ளது. ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியிலும், அதனைச் சுற்றிலும் பிரமாண்டமான 14 திறந்த வெளி மற்றும் உள்ளரங்க அரங்கங்கள் அமைத்து இதுவரை பார்க்காத வண்ணம் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
மேலும் அனைவரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் புகழ்பெற்ற இயக்குநரான பிரசாந்த் நீல் உருவாக்கிய இப்படம் மிகப் பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் தயாரான திரைப்படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாரான திரைப்படங்களில் சலார் பகுதி 1' முன்னிலையில் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் டீஸர் வெளியாகி இதுவரை 15 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: D50 படத்தின் அப்டேட் வந்தாச்சு.. மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்த தனுஷ்