சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமாக இருக்கக்கூடியவர் நாசர். இவர் தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக இவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காமல் நிலைத்து நிற்கும்.
-
"மூத்த நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
திரு. நாசர் அவர்களின் தந்தை திரு. பாஷா அவர்கள் மறைவெய்தினார் என்றறிந்து வருந்துகிறேன்.
தந்தையின் மறைவால் வாடும் திரு. நாசர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்… pic.twitter.com/W4XB086WPC
">"மூத்த நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 10, 2023
திரு. நாசர் அவர்களின் தந்தை திரு. பாஷா அவர்கள் மறைவெய்தினார் என்றறிந்து வருந்துகிறேன்.
தந்தையின் மறைவால் வாடும் திரு. நாசர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்… pic.twitter.com/W4XB086WPC"மூத்த நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 10, 2023
திரு. நாசர் அவர்களின் தந்தை திரு. பாஷா அவர்கள் மறைவெய்தினார் என்றறிந்து வருந்துகிறேன்.
தந்தையின் மறைவால் வாடும் திரு. நாசர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்… pic.twitter.com/W4XB086WPC
மேலும் இவர் இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டிருந்தாலும், இவர் ரசிகர்கள் மனதில் நின்றது இவரது நடிப்பினால் தான். நடிக்கும் கதாபாத்திரமாகவே வாழக்கூடிய திறமை வாய்ந்த சிறந்த நடிகர் நாசர். இவர், சில படங்களில் வில்லனாகவும், சில படங்களில் நகைச்சுவை நாயகனாகவும் கலக்கி இருப்பார். குறிப்பாக பெரும்பாலான கமலஹாசன் நடிக்கும் அல்லது இயக்கும் திரைப்படங்களில் நடிகர் நாசரின் கதாபாத்திரங்கள் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
கிட்டத்தட்ட ஐந்நூறு படங்களுக்கு மேலாக நடித்திருக்கும் நடிகர் நாசர், திரையுலகின் முக்கிய திரைப்படங்களாகக் கருதப்படும் படங்களில் இவரது பங்கு இல்லாமல் இருக்காது. இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரம் வேறு யாருக்கும் பொருந்தாதவாறு இவரது நடிப்பு அமைந்திருக்கும். சில தினங்களுக்கு முன்னதாக வெளியான "800" படத்திலும் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில், செங்கல்பட்டு தட்டான்மலை பகுதியில் வசித்து வந்த நடிகர் நாசரின் தந்தை மெஹபூப் பாஷா (94) வயது மூப்பு காரணமாக காலமானார். இவரது மறைவு நடிகர் நாசர் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியிலும், திரைத்துறையினர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் நாசரின் தந்தை மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் நாசரின் தந்தை மறைவுக்காக ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். நடிகர் நாசர் இன்று மிகச் சிறந்த நடிகராகத் திகழ்வதற்கு அவரது தந்தை ஒரு முக்கிய காரணம் எனப் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கோபி சாந்தா To மனோரமா ஆச்சி.. சிகரம் தொட்ட நடிப்பு ராட்சசி நினைவு நாள் இன்று!