ETV Bharat / state

'கரோனா பயமும்... ஊரடங்கும் தேவை இல்லாதது' - நடிகர் மன்சூர் அலிகான் - நடிகர் மன்சூரலிகானின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

சென்னை: கரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாதது என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

Mansoor alikhan
Mansoor alikhan
author img

By

Published : May 27, 2020, 12:58 AM IST

கரோனா தொற்று அச்சம் காரணமாக மார்ச் இறுதி வாரம் முதல் மே இறுதி வாரம் வரை இந்திய முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதுகுறித்து நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தட்டம்மை, தடுப்பம்மை போன்றவற்றை குழந்தைப் பருவத்திலேயே எதிர்கொண்டு நம் உடல் வலிமைப் பெற்று இருக்கிறது. மேலும், நமது உணவு பழக்கங்களால், நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது இயற்கையிலேயே அதிகமாக உள்ளது.

கரோனாவைப் பார்த்து நாம் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. ஏன், தமிழ்நாட்டில் கரோனா ஒன்றுமே இல்லை என்பது தான் என் கணிப்பு. நம் மூதாதையரின் வைத்தியமே கரோனாவை 100 விழுக்காடு குணப்படுத்திவிடும். சளி, இருமல் போன்றவைகள் வந்தால் சுக்கு, மிளகு, இஞ்சி போன்றவற்றை கொதிக்க வைத்து குடித்தால், இரண்டு நாட்களிலேயே காணாமல் போய்விடுகிறது. மேலும், தூதுவளை உள்ளிட்ட ஏகப்பட்ட இயற்கை மருத்துவம் நம் கையில் இருக்கிறது.

இப்படி சளி, இருமல் காய்ச்சலை வைத்து வரும் கரோனாவை, நம் உணவுப்பழக்கம் மூலம் நாம் எளிதாக எதிர்கொள்ள முடியும். ஆனால், நம் நாட்டு அரசு, மேலை நாட்டினரைப் பார்த்து பயந்து ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. ஊரடங்கே இங்கு போட்டிருக்கக் கூடாது என்பது தான் என் கருத்து. இதனால், ஏழை எளியவர்களின் வாழ்வாதாரமும், வாழ்வும் கேள்விக்குறியாகியிருப்பதோடு, நாடே மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலில் இருக்கிறது.

Mansoor alikhan
நடிகர் மன்சூர் அலிகான்

சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளித்திருக்கும் அரசு 20 நபர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும், என்று கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அப்படியானால் மற்றவர்கள் என்ன செய்வார்கள். எனவே, இது குறித்து மூத்தக் கலைஞர்கள் ஒன்றிணைந்துப் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

திரைத்துறை மட்டும் இன்றி, மேலும் பல துறைகள் மீண்டும் பழையபடி செயல்பட உத்தரவிட வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளை தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் கோயில்களையும் திறக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 'கரோனோவால் தொட்டாலே தீட்டு என்ற நிலைமை வந்துள்ளது' - மன்சூர் அலிகான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.