ETV Bharat / state

kazan khan: 90ஸ் திரைப்படங்களில் நடித்த பிரபல வில்லன் நடிகர் கசன் கான் காலமானார்! - கசன் கான் மரணம்

தமிழ் மற்றும் மலையாள படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்ற நடிகர் கசன் கான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 13, 2023, 1:32 PM IST

Updated : Jun 13, 2023, 4:42 PM IST

சென்னை: தமிழ் , மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் வில்லன் நடிகராக நடித்தவர் கசன் கான். தமிழ் சினிமாவில் 1992ம் ஆண்டு பிரசாந்த் நடித்த செந்தமிழ்ப்பாட்டு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு பல்வேறு தமிழப் படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றார். மேட்டுக்குடி, பிரியமானவளே உள்ளிட்ட படங்களில் இவரது வில்லன் நடிப்பு பேசப்பட்டது. விஜய்யின் பத்ரி படத்திலும் இவர் நடித்துள்ளார். இவரது முரட்டு வில்லன் கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

மேலும் விஜயகாந்த் நடித்த பல படங்களில் தீவிரவாதி கதாபத்திரத்தில் நடித்துள்ளார். விஜயகாந்த் நடிப்பில் வெற்றி படங்களான வானத்தை போல, வல்லரசு, என் ஆசை மச்சான் ஆகிய படங்களின் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்தார். விஜயகாந்த் நடிப்பில் வெளியான சேதுபதி ஐபிஎஸ் படத்தில் இடம்பெற்ற சாத்து நட சாத்து என்ற பாடலில் இவரது ரியாக்ஷன்கள் மிகவும் பிரபலம்

மலையாளத்தில் சிஐடி மூசா என்ற திரைப்படம் இவர் நடித்த படங்களில் மிக பிரபலமான படம். முறை மாமன் படத்திலும் இவரது வில்லத்தனம் ரசிக்கப்பட்டது. பிரியமானவளே படத்தில் சிம்ரனை விரும்பும் கதாபாத்திரத்தில் நடித்த இவரது மேனரிஸமும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ரசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: HBD GV Prakash: வெயிலோடு விளையாடி முதல் அடியாத்தி இது என்ன பீலு வரை.. இசை இளவரசன் ஜி.வி.பிரகாஷ் பர்த்டே ஸ்பெஷல்!

இவர் நடித்த காலத்தில் தென்னிந்தியாவின் அழகான வில்லன் என பேசப்பட்டவர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் நடித்து வந்தாலும் குறைந்த படங்களில் மட்டுமே நடித்துள்ளார். கடைசியாக 2015ம் ஆண்டு லைலா ஓ லைலா என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு சினிமாவை விட்டு விலகி தொழிலில் ஆர்வம் செலுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

பிஸினஸில் மிகவும் பரபரப்பாக இருந்ததால் தனக்கு வந்த சினிமா வாய்ப்புகளை மறுத்துவிட்டு தீவிரமாக தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தி வந்துள்ளார். மலையாள திரை உலகிலும் தனது நடிப்பை வெளி காட்டி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். இந்த நிலையில் கசன் கான் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவரது குடும்பத்தினருக்கு தமிழ் மற்றும் மலையாள திரையுலகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தயாரிப்பாளர்கள் கண்டுகொள்வதில்லை; நடிகை ஊர்வசி பரபரப்பு குற்றச்சாட்டு!

Last Updated : Jun 13, 2023, 4:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.