ETV Bharat / state

வேளாண் வர்த்தகத் திருவிழாவுக்கு எல்லோரும் வாங்க: கை எடுத்து கும்பிட்டு அழைத்த நடிகர் கார்த்தி

ஜூலை 8 மற்றும் 9ஆம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், தமிழக அரசு நடத்தவுள்ள வேளாண் வர்த்தகத் திருவிழா குறித்த தகவலை வீடியோ மூலம் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி
author img

By

Published : Jul 6, 2023, 4:47 PM IST

வேளாண் வர்த்தகத் திருவிழாவுக்கு எல்லோரும் வாங்க: கை எடுத்து கும்பிட்டு அழைத்த நடிகர் கார்த்தி

சென்னை: நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர். இவரது படங்கள் நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து காணப்படும். ஆரம்பத்தில் இயக்குநர் மணிரத்னத்தின் படத்தில் உதவி இயக்குநராக இருந்தாலும், பின்னர் இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான 'பருத்திவீரன்' படத்தின்‌ மூலம் நடிகராக அறிமுகமானார்.

முதல் படமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ் சினிமா வரலாற்றில் சிவாஜி கணேசனைத் தொடர்ந்து முதல் படமே மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற, நடிகர் என்ற பெருமையைப் பெற்றார், நடிகர் கார்த்தி. இவர் நடிகராக மட்டுமின்றி, நடிகர் சங்கத்திலும் பொறுப்பு வகித்து வருகிறார். அதுமட்டுமின்றி விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் உழவன் பவுண்டேசன் என்ற அறக்கட்டளையும் நடத்தி வருகிறார்.

நடிகர் சிவகுமாரின் மகன்களான சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் கல்விக்கு உதவி வரும் நிலையில், அவரது தம்பி நடிகர் கார்த்தி உழவர்களின் மேம்பாட்டுக்காக உழவன் பவுண்டேஷன் என்கிற அறக்கட்டளை மூலம் நலிவுற்ற விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

கார்த்தி, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற படத்தில் விவசாயி மற்றும் விவசாயம் செய்வது என்பது ஒரு பெருமையான விஷயம்தான் என்பதை சொல்லியிருந்தார். மேலும் தனது படங்களில் அவ்வப்போது விவசாயம் குறித்த நல்ல சிந்தனைகளைப் புகுத்தி வருபவர், நடிகர் கார்த்தி. இந்த நிலையில் வரும் ஜூலை 8 மற்றும் 9ஆம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வேளாண் வர்த்தகத் திருவிழா ஒன்றை, நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அவ்விழாவை குறித்த தகவலை மிகவும் அக்கறையுடன் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ள நடிகர் கார்த்தி, "நூற்றுக்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர்கள் தங்களது பொருட்களை இந்த வேளாண் வர்த்தகத் திருவிழாவில் நேரடியாக விற்பனை செய்ய இருக்கின்றனர். அனைவரும் குடும்பத்துடன் இந்த திருவிழாவுக்கு வந்து வேளாண் மக்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்" என வீடியோ மூலம் கோரிக்கை வைத்துள்ளார். இவரின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில், கார்த்தி வந்தியத்தேவன் கதாபாத்திரம் நடித்திருந்தார். அவரின் திறமை வாய்ந்த நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தற்போது இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜப்பான்' என்ற படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். கடந்த மாதம் இப்படத்தின் டீஸர் வெளியானது, மேலும் இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Vande Bharat: வந்தே பாரத் ரயில்களில் கட்டணம் குறைப்பு? குறைவான பயணிகளின் வருகையால் முடிவா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.