ETV Bharat / state

தீபாவளி ரேஸில் களமிறங்கும் நடிகர் ஜெய்... ஆனால் தியேட்டரில் அல்ல! - label series

Actor Jai Label Web series : தீபாவளி பண்டிகைக்கு பல்வேறு படங்கள் திரையரங்கில் வெளியாவதற்கு வரிசையில் இருக்கும் நிலையில், ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் லேபில் சீரிஸ்ம் அந்த வரிசையில் இணைந்து உள்ளது.

தீபாவளி ரேஸில் இணைந்த லேபில் சீரிஸ்
தீபாவளி ரேஸில் இணைந்த லேபில் சீரிஸ்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 10:23 PM IST

சென்னை: நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் லேபில் ஒரிஜினல் சீரிஸ் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

கனா, நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களின் மூலம் வெற்றி இயக்குநராக அறியப்பட்டவர் இயக்குநர் அருண்ராஜா காமராஜ். இவர் முதல் முறையாக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி உள்ளார். லேபில் என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த சீரிஸை இயக்கியதோடு மட்டுமில்லாமல், இந்தப் படத்தின் திரைக்கதையையும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதி உள்ளார். மேலும் கூடுதலாக இயக்குநர் அருண்ராஜா காமராஜுடன் இணைந்து இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதி உள்ளார்.

லேபில் சீரிஸை முத்தமிழ் படைப்பகம் தயாரித்து உள்ளனர். இசையமைப்பாளர் சாம் CS இந்த சீரிஸ்க்கு இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். B.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றி உள்ளனர்.

யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உட்பட நான்கு பாடலாசிரியர்கள் இந்த சீரிஸுக்கு பாடல்களை எழுதியுள்ளது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. நடன அமைப்பை அசார் மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸில் ஜெய் மற்றும் தன்யா ஹோப் தவிர்த்து, நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்த வெப் சீரிஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

இந்த தீபாவளி பண்டிகைக்கு கார்த்தி நடித்த ஜப்பான், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸல், விக்ரம் பிரபு நடித்து உள்ள ரெய்டு உள்ளிட்ட பல படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் நிலையில், தற்போது லேபில் படமும் தீபாவளி ரேஸில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: லியோ வெற்றி கொண்டாட்டம்; கட்டுப்பாடுகளுடன் பல கேள்விகளை எழுப்பியுள்ள காவல் துறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.