ETV Bharat / state

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் அதர்வாவின் "மத்தகம்" - இயக்குநர் பிரசாத் முருகேசன்

இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கி நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள "மத்தகம்" சீரிஸ் வரும் ஆகஸ்ட் 18 முதல் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

ஆகஸ்ட் 18 முதல் அதர்வாவின் "மத்தகம்".. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம்..

author img

By

Published : Aug 7, 2023, 9:28 AM IST

சென்னை: இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), தங்களது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் "மத்தகம்" சீரிஸின் ட்ரெய்லரை சமீபத்தில் வெளியிட்டது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஒரிஜினல் சீரிஸ் வரும் ஆகஸ்ட் 18 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாக உள்ளது.

இயக்குநர் பிரசாத் முருகேசன் எழுதி இயக்கியுள்ள "மத்தகம்" சீரிஸில் நடிகர் அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல் மற்றும் டிடி (திவ்யதர்ஷினி) ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் டிரெய்லரில் அதர்வா மற்றும் மணிகண்டனின் சண்டைக் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் இந்த சீரிஸ் ஒளிபரப்பாக உள்ளது. சமீபத்தில் திரையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான " குட் நைட் " திரைப்பட கதாநாயகன் மணிகண்டன் முதல் முறையாக வில்லனாக நடிக்கும் இந்த சீரிஸில் அதர்வா நேர்மை மிகுந்த போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்த சீரிஸில் பிரபல இயக்குநர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட எதிர்ப்பார்ப்பு மிக்க பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: தீ பெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசுனாதான் நெருப்பு வரும்.. ரீ-ரிலீஸ் ஆகும் ரஜினியின் மூன்று முகம்!

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” சீரிஸை Screen Scene Media Entertainment நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த வெப் சீரிஸுக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். மேலும் எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார்.

தற்போது இந்த சீரிசின் பரபரப்பான ஆக்சன் காட்சிகளைப் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் அமைத்துள்ளார். சீரிஸுக்கு சுரேஷ் கல்லரி கலை இயக்கம் செய்துள்ளார். சமீப காலமாக ஹாட்ஸ்டார் ரசிகர்கள் விரும்பும் வகையில் தொடர்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மத்தகம் தொடரும் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இந்த மத்தகம் சீரிஸும் அதேபோன்று இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் " குட் நைட் " படம் மூலம் நடிகர் மணிகண்டன் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் தனக்கான தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் இந்த சீரிஸில் வில்லனாக உருவெடுத்த இருப்பது ரசிகர்கள் மத்தியில் சீரிஸுக்கான ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: சினிமா சிதறல்கள்: சந்திரமுகி 2 பர்ஸ்ட் லுக் முதல் இயக்குநர் சாந்தகுமார் பட அறிவிப்பு வரை கோலிவுட் அப்டேட்கள்!!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.