சென்னை: கிளியர் வாட்டர் பிலிம்ஸ் & கேப்டன் மெகா என்டர்டெய்ன்மென்ட் தயாரித்து இயக்குநர் சி.எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் படம் சபா நாயகன். டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று(நவ. 26) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் கார்த்திகேயன், அசோக் செல்வன், நாயகி கார்த்திகா, இசை அமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சபா நாயகன் - அசோக் செல்வன் பேசுகையில், "சபாநாயகன் இது என்டர்டெய்னர் படம். இந்த படத்தில் நிறைய கற்றுக் கொண்டேன். என்னாலும் நிறைய நகைச்சுவை பண்ண முடிந்ததை நானே தெரிந்து கொண்டேன். இந்த படத்தில் நிறைய யூடியூபர்கள் நடித்துள்ளனர்.
மேலும் நாஸ்டாலஜி என்ற விஷயம் இந்த படத்தில் இருக்கிறது. முதலில் பார்க்கும் சில விஷயம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் அல்லது நம்மோடு கனெக்ட் ஆகும். நான் பிறந்தது ஈரோடு. ஆனால் இதுவரை வந்த கதைகளில் திருப்பூர், கோயம்புத்தூர், பொள்ளாச்சின்னு தான் இருக்கும். ஏன் ஈரோடு இல்லை என்றும் யோசித்திருக்கிறேன்.
நான் கதை கேட்கும் போது ஈரோடு வந்தது இல்லை. ஆனால் தற்பொது ஸ்கூல் சீன் எல்லாம் ஈரோட்டில் தான் ஷூட்டிங் பண்ணது மகிழ்சி அளிக்கிறது. ஒரு நடிகராக லவ் & ஆக்சன் என இரண்டு கதைகளும் பிடிக்கும். வரும் காலங்களில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து பண்ண உள்ளேன்" என்று தெரிவித்தார்.
இதனிடையே படத்தில் 3 ஹீரோயின்கள் அதுவும் கல்யாணத்துக்கு பிறகு நடிக்கும் படம் என்பதால் உங்கள் மனைவி கீர்த்தி என்ன சொன்னார் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ஹீரோயினுக்காக படம் பண்றதில்லை. படத்தின் கதைக்காக தான் பண்றோம். அதனால் 3 ஹீரோயினாக இருந்தாலும் கீர்த்தி அப்படி எதுவும் நினைக்க மாட்டார் என்று அசோக் செல்வன் கூறினார்.
அசோக் செல்வன் நடித்துள்ள சபா நாயகன் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பள்ளி மாணவன், கல்லூரி மாணவன் என வெவ்வேறு தோற்றத்தில் வருகிறார் அசோக் செல்வன். இந்த படத்தில் அவர் பள்ளி மாணவராக நடித்திருக்கும் காட்சிகள் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அசோக் செல்வன் தன் கைவசம் மூன்று படங்களை வைத்து உள்ளார்.
இதையும் படிங்க: த்ரிஷா உள்பட மூவர் மீது மானநஷ்ட வழக்கு தொடுக்க உள்ளதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு!