சென்னை: இதுகுறித்து நடிகர் அஜித் குமாரின் பதிவில், "பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும் போதோ, என்னைப் பற்றிக் குறிப்பிட்டுப்பேசும் போதோ என் இயற்பெயரான அஜித் குமார் அல்லது அஜித், ஏகே என்று குறிப்பிட்டால் போதுமானது.
'தல' என்றோ; வேறு ஏதாவது பட்டப்பெயர்களையோ குறிப்பிட்டு என்னை அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனை நடிகர் அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Kadaisi Vivasayi Movie - இசைஞானிக்கே இந்த நிலைமையா?