ETV Bharat / state

கரோனா தடுப்பு போராளிகளின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் - நடிகர் ஆரி - நடிகர் ஆரியின் படங்கள்

கரோனா தொற்றால் உயிரிழக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், பத்திரிகையாளர்களின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என நடிகர் ஆரி கோரிக்கை விடுத்துள்ளார்.

aari
aari
author img

By

Published : Apr 23, 2020, 3:51 PM IST

கரோனா தொற்று காரணமாக சென்னை நரம்பியல் நிபுணரும், 30 ஆண்டுகளாக மக்களுக்குச் சேவை செய்து வந்த மருத்துவருமான சைமன் ஹெர்குலஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.

அவரது உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றபோது, அப்பகுதியில் உள்ள சமூக விரோதிகள் சிலர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு அலுவலர்கள் மீது கற்களை வீசித் தாக்குதலிலும் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, 21 பேரைக் கைது செய்தனர். இச்சம்பவம் தமிழ்நாட்டில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னைப் பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கூறியிருந்தார்.

நடிகர் ஆரியின் கோரிக்கை வீடியோ

இதனையடுத்து நடிகர் ஆரி இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நாட்டை பாதுகாக்க ராணுவ வீரர்கள் தன் உயிரை துச்சமென எண்ணி வாழும் அதே வாழ்க்கையை மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், பத்திரிகையாளர்கள், தூய்மைப் பணியாளர்களும் தற்போது செய்து வருகின்றனர்.

நம் நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக இவர்கள் தற்போது களத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோன்ற களப்பணியில் உள்ளவர்கள் உயிரிழந்தால், ராணுவ வீரர்கள் போல் அரசு மரியாதையுடன் அவர்களின் உடலை அடக்கம் செய்ய, அரசு முன்வரவேண்டும்.

அதே போல், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால், குண்டர் சட்டம் பாயும் என்ற காவல் துறை அறிவிப்பை வரவேற்பதாகவும்" கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.