இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை டிசம்பர் 1ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியதாவது:
தமிழ்நாட்டில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்வதற்கு சென்னையில் மேலும் ஒரு தனியார் ஆய்வகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் புதிதாக 64 ஆயிரத்து 588 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்து ஆயிரத்து 399, ஆந்திராவிலிருந்து தமிழ்நாடு வந்தவர்களில் 3, கேரளா மற்றும் தெலங்கானாவில் இருந்து வந்த ஒருவர் என மொத்தம் ஆயிரத்து 404 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 18 லட்சத்து 33 ஆயிரத்து 957 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 7 லட்சத்து 83 ஆயிரத்து 319 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் தற்போது மருத்துவமனையில் மற்றும் தெளிவுபடுத்தும் முகாம்களில் 10 ஆயிரத்து 980 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த ஆயிரத்து 411 நபர்கள் வீடுகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 60 ஆயிரத்து 617 என உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் தனியார் மருத்துவமனையில் 6 , அரசு மருத்துவமனையில் 4 என 10 நபர்கள் இறந்துள்ளனர். இதன் மூலம் தற்போது மாநிலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 722 என உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று புதிதாக 380, கோயம்புத்தூரில் 141 என இந்த இரு நகரங்களில் அதிக அளவில் வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 2,15,739
கோயம்புத்தூர் - 48,866
செங்கல்பட்டு - 47,675
திருவள்ளூர் - 41,017
சேலம் - 29,910
காஞ்சிபுரம் - 27,720
கடலூர் - 24,239
மதுரை - 19,748
வேலூர் - 19,396
திருவண்ணாமலை - 18,654
தேனி - 16,594
தஞ்சாவூர் - 16,459
விருதுநகர் - 15,912
தூத்துக்குடி - 15,688
கன்னியாகுமரி - 15,722
ராணிப்பேட்டை - 15,621
திருநெல்வேலி - 14,855
விழுப்புரம் - 14,635
திருப்பூர் - 15,457
திருச்சிராப்பள்ளி - 13,443
ஈரோடு - 12,463
புதுக்கோட்டை - 11,131
கள்ளக்குறிச்சி - 10,669
திண்டுக்கல் - 10,334
திருவாரூர் - 10,474
நாமக்கல் - 10,445
தென்காசி - 8,082
நாகப்பட்டினம் - 7,653
திருப்பத்தூர் - 7,258
நீலகிரி - 7,441
கிருஷ்ணகிரி - 7,399
ராமநாதபுரம் - 6,214
சிவகங்கை - 6,322
தருமபுரி - 6,088
அரியலூர் - 4,567
கரூர் - 4,833
பெரம்பலூர் - 2,242
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 926
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1000
ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க: 'ஆக்ஸ்போர்ட் கரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது, பக்கவிளைவுகள் அற்றது' - சீரம்