சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆயுதப்படைக் காவல் துறையினரின் பயன்பாட்டுக்காக ரூ.4.8 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தொடங்கிவைத்தார்.
ஆயுதப்படையில் பணியாற்றும் இரண்டாயிரத்து 198 பெண் காவலர்களின் குறைகளைத் தீர்க்கும்பொருட்டு மனுப் பெட்டி வசதியை தொடங்கிவைத்தார். அதுமட்டுமல்லாமல் மருத்துவமனை பணிகளில் ஈடுபட்டுள்ள ஆயுதப்படைக் காவலர்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “சென்னை காவல்துறை எல்லா சூழ்நிலைகளிலும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து வருகின்றது. ஆயுதப்படை காவலர்களின் நலன் காக்கும் பொருட்டு, இந்த குடிநீர் சுத்திகரிப்பு மையம் சென்னை காவல்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. பணியில் ஈடுபடும் ஆயுதப்படை பெண் காவலர்கள் தங்களது குறைகளை இந்த மனுப்பெட்டியில் தெரிவிக்கலாம்.
பெறப்படும் புகார் மனு மீது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையிலான குழு விசாரித்து ஒரு வாரத்திற்குள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பர்” என்றார். மேலும் நிகழ்ச்சியின்போது மாரடைப்பால் உயிரிழந்த கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்த ஆயுதப்படை தலைமைக் காவலர் மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு இரண்டரை லட்சத்துக்கான காசோலையையும் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வழங்கினார்.
இதையும் படிங்க : 'ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை மாவட்ட அளவிலும் தொடங்க வேண்டும்'