ETV Bharat / state

பொய்ப் பரப்புரை செய்தால் நடவடிக்கை - டிஜிபி எச்சரிக்கை

சமூக வலைதளங்களில் மழை பாதிப்பு குறித்து பொய்ப் பரப்புரை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

டிஜிபி சைலேந்திரபாபு
டிஜிபி சைலேந்திரபாபு
author img

By

Published : Nov 12, 2021, 12:26 PM IST

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாகச் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.

கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பிலிருந்து பொதுமக்களைக் காத்து இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் கொண்டுவர காவல் துறையினர், அரசுத் துறையினர் இரவு பகல் பாராமல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

சிலர் மழை பாதிப்பு குறித்து மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் தவறான தகவல்கள் பரப்பிவருவதாக காவல் துறையினரின் கவனத்திற்கு வந்துள்ளது. இதுபற்றி டிஜிபி சைலேந்திரபாபு, மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

இது குறித்து விரிவாக எடுத்துரைக்கும் சைலேந்திரபாபு, ”சில சமூக விரோதிகள் பொது மக்களிடையே மழை வெள்ளம் குறித்த அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்கள், கருத்துகளைப் பதிவிடுவது பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்திவருகிறது.

சமூக வலைதளங்களைப் பயனுள்ள வகையில் பெரும்பாலானோர் பயன்படுத்திவரும் நிலையில் சிலர் அரசு நிர்வாகத்திற்கு அவப்பெயரை உண்டாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இதுபோன்று அவதூறு கருத்துகளைத் திட்டமிட்டே பரப்பிவருகின்றனர்.

இது சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு சமூகப் பொறுப்பின்றி உண்மைக்குப் புறம்பான பதிவுகளைப் பதிவிடும் எவராயினும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் அவர்களது வலைதள கணக்குகளை முடக்கவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

இதையும் படிங்க: TN Weather Update: காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.