சென்னை: தலைமைச் செயலக நேரடி உதவிப்பிரிவு அதிகாரிகளுக்கு கூடுதல் இயக்குநர்களாக பதவி உயர்வு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை செயல்படுத்தவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால் ஆட்சியர் அதிகாரிகள் ஸ்வர்ணா, மைதிலி ராஜேந்திரன் ஆகிய இருவரும் நேரில் ஆஜராக வேண்டி வரும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று (செப். 22) விசாரணைக்கு வந்தது.
அப்போது, இரு பெண் ஆட்சியர் அதிகாரிகளும் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவுமில்லை. நீதிமன்றத்திலும் நேரில் ஆஜராகவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், அதிகாரிகளின் இந்த செயல் கண்டனத்துக்குரியது மட்டுமல்லாமல், நீதித்துறையை கேலிக்கூத்தாக்குவதைப் போன்றது எனக் கூறி, இரு அதிகாரிகளுக்கும் எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டனர். பின் வழக்கின் விசாரணையை அக்டோபர் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: செப்.25 முதல் அரசு கல்லூரிகளில் எம்எட் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்!