சென்னை: ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அறிக்கை சமர்பித்துள்ளது. இதுகுறித்து தலைமை செயலாளர் இறையன்பு, பல்வேறு துறை அதிகாரிகள், சட்ட வல்லுநர்களுடன் இன்று (ஜூலை 30) ஆலோசனைக் மேற்கொண்டார். இதில் ஆன்லைன் ரம்மிக்கு தடை சட்டம் கொண்டுவருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
விரைவில் புதிய அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் உள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திரரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: "எனக்கு கேரளாவில் ரசிகர் கூட்டம் இருப்பது போலவே ‘காம்ரேட்’ பினராயி விஜயனுக்கும் தமிழ்நாட்டில் இருக்கிறது"