ETV Bharat / state

'இந்தியாவிலேயே அதிக கரோனா பரிசோதனை நடந்தது சென்னையில் தான்' - கரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

சென்னை : சென்னையில் இதுவரை 80 ஆயிரம் நபர்களுக்கு கரோனா தொற்றை உறுதிசெய்வதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

author img

By

Published : May 17, 2020, 6:13 PM IST

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம் 58 மற்றும் 59க்கு உட்பட்டப் பகுதிகளில் கரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கி, வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்பு செய்தியாளர்களுக்கு வெளியிட்டுள்ள காணொலியில், "மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவித்தார். இதை சென்னையில் இப்போது தொடங்கிவிட்டோம்.

ராயபுரத்தில் வைரஸ் தொற்றைத் கட்டுப்படுத்த தனித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிக வைரஸ் தொற்று உள்ள 10 தெருக்களில் வாழும் மக்களுக்கு அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் கிடைக்க மாநகராட்சி சார்பில், தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு கபசுரக் குடிநீர், மூலிகை கசாயம் ஆகியவற்றை வழங்குவதோடு, வீடுகளுக்குச் சென்று சளி, காய்ச்சல் இருக்கின்றதா என கண்டறிந்ததன் மூலமாக நோய்த்தொற்றை ஓரளவு கட்டுப்படுத்தி விட்டோம்.

மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க செல்லும் பொழுதும், இறைச்சி கடைகளுக்கும், மருந்து கடைகளுக்குச் செல்லும் பொழுதும் முகக் கவசத்தை அணிந்து பொருள்களை வாங்கிய பின்பு, கைகளால் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கும் கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

அனைத்துப் பகுதிகளிலும் தேடித்தேடி மக்களைக் கண்டுபிடித்து பரிசோதனை செய்வதால் கரோனா தினமும் அதிகரித்து வருகிறது, மக்கள் இதனைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டாம். இறப்பு விகிதத்தைக் குறைப்பது தான் அரசின் முதன்மையான நோக்கம்.

மார்ச் 26ஆம் தேதி முதல் இன்று வரை சென்னையில் இதுவரை 80 ஆயிரம் நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகப் பரிசோதனை சென்னையில்தான் செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் பார்க்க: தமிழ்நாட்டில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.