புழல் சிறையில் அடைக்கபட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பல்வேறு பணிகள் வழங்கப்பட்டு அதற்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, காலணிளுக்கு பாலிஸ் செய்யும் பணியில் காலணி ஒன்றுக்கு 49 பைசா வழங்கப்பட்டு வந்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு காலணி ஒன்றுக்கு 49 பைசா அளிக்கப்பட்ட ஊதியம் 89 பைசாவாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் காலணி ஒன்றுக்கு மீண்டும் பழைய கூலி தொகையான 49 பைசா வழங்கப்பட்டுள்ளது. இதானால், வியாசர்பாடியைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி பாண்டியன் என்பவர் ஊதிய குறைப்பு தொடர்பாக புழல் சிறை கண்காணிப்பாளரிடம் கேட்டபொழுது, அவர் பாண்டியனை மிரட்டியுள்ளார்.
பின்னர், பாண்டியன் இதுகுறித்து அவரது மனைவி ஸ்டெல்லாவிடம் தெரிவித்தார். உடனே ஸ்டெல்லா இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் புழல் சிறை பொதுத் தகவல் அதிகாரிக்கு மனு அளித்தார்.
அந்த மனுவிற்கு முறையான பதில் வராத நிலையில், ஸ்டெல்லா கணவரைக்கான சிறைக்கு செல்லும் போதெல்லாம், சிறை கண்காணிப்பாளர் ஸ்டெல்லாவிடம் மனுவை திரும்ப பெறாவிட்டால் உன் கணவனை வேறு சிறைக்கு மாற்றி விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, ஸ்டெல்லா சென்னை உயர் நீதிமன்றத்தில் புழல் சிறை கண்காணிப்பாளர் மீது வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டீக்கா ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து புழல் சிறை கண்காணிப்பாளர் அக்டோபர் 16ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:
பயோ-மெட்ரிக் வழக்கில் மின் பகிர்மான கழகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!