ETV Bharat / state

தூக்கி வீசப்பட்ட தற்கொலை செய்தவரின் உடல் - சிக்கிய விடுதி மேலாளர்

விடுதியில் தற்கொலை செய்து கொண்ட நபரின் உடலை, மாடியிலிருந்து தூக்கி வீசிய விடுதி மேலாளர் காவல்துறையில் பிடிபட்டார்.

தற்கொலை  சென்னையில் தூக்கி வீசப்பட்ட தற்கொலை செய்தவரின் உடல்  சென்னை செய்திகள்  chennai news  chennai latest news  suicide news  accused  accused found in body of the suicide was thrown away
தற்கொலை
author img

By

Published : Oct 19, 2021, 5:40 PM IST

சென்னை: கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று, எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகம் அருகில் முட்புதர் நிறைந்த பகுதியில், அடையாளம் தெரியாத ஆணின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அதனைக் கண்ட அப்பகுதிக்கு அருகிலுள்ள தங்கும் விடுதி மேலாளர் பீர் முகமது காவல் துறையினருக்குத் தகவல் அளித்தார்.

தகவலின் அடிப்படையில் எழும்பூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடலை ஆய்வு செய்தார்.

பின்னர் தடயவியல்துறை உதவி இயக்குநர் சோபியாவும் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரிக்கும் பணியை மேற்கொண்டார்.

அதிர்ச்சித் தகவல்

இதையடுத்து அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலத்தை உடற்கூராய்விற்காக, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்விற்குப் பிறகு, அவர் யார் என அடையாளம் தெரியாததால், அவரது உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டது.

இது தொடர்பாக எழும்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் முதற்கட்டமாக தகவலளித்த தங்கும் விடுதி மேலாளர் பீர் முகமதுவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களைத் தெரிவித்ததால், அவர் மீது காவலர்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து தங்கும் விடுதி ஊழியர்களிடம் தனித்தனியே காவல் துறையினர் விசாணை நடத்தினர். இதில், ரூம் பாயாக வேலை செய்து வரும் அயனாவரத்தைச் சேர்ந்த ரவி என்பவர் மீதும், காவல் துறையினருக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. அப்போது அவரிடம் காவல் துறையினர், தங்களது கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.

அதாவது சிபிசிஐடி அலுவலகம் அருகே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண், தங்கும் விடுதியில் குளிப்பதற்காக அறை எடுத்துத் தங்கி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பதும், அவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டது யாருக்கும் தெரியக்கூடாது என்பதனால், விடுதியின் மேலாளர் பீர் முகமது, ரூம் பாய் ரவி ஆகியோர் இறந்தவரின் உடலை விடுதியில் மாடியில் இருந்து முட்புதருக்குள் தூக்கி வீசியதும் காவல் துறையினருக்குத் தெரியவந்தது.

தூக்கி வீசப்பட்ட உடல்

தொடர் விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவர், ஆந்திர மாநிலம், வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (45) என்பது தெரியவந்தது. இவர் கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி காலை, குளித்து விட்டு ஓய்வு எடுப்பதற்காக விடுதியில் அறைகேட்டுள்ளார். அவரிடம் சரியான அடையாள அட்டை இல்லை என்றாலும், அவருக்கு தங்கும் விடுதி அறை (எண் 111) கொடுத்துள்ளது.

அறை எடுத்து தங்கிய ராஜ்குமார், அன்று முழுவதும் அறையை விட்டு வெளியே வராததால், சந்தேகமடைந்த விடுதி மேலாளர் பீர் முகமது, ரூம் பாய் ரவி ஆகியோர் மறுநாள் (அக்டோபர் 4) காலை அறைக் கதவைத் தட்டியுள்ளனர். கதவை திறக்காததால் ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளனர். அப்போது ராஜ்குமார் மின்விசிறியில் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்துள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் காவல் துறைக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல், நான்காம் தேதி இரவு, ராஜ்குமாரின் உடலை, விடுதியின் மாடியிலிருந்து, அருகிலுள்ள முட்புதரில் வீசியுள்ளனர். மேலும் அவர் தூக்கிட்டுக்கொண்ட கயிறு மற்றும் அவர் அணிந்திருந்த செருப்பு ஆகியவற்றையும் மறைத்து வைத்துள்ளனர்.

சிக்கிக்கொண்ட விடுதி மேலாளர்

விடுதியை நிர்வகிக்கும் பீர் முகமது, இடத்தின் உரிமையாளரிடம் இருந்து மேல்வாடகைக்கு (குத்தகை) எடுத்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக விடுதி நடத்தி வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநர்களின் உதவியோடு அதிகப்படியான வாடிக்கையாளர்களை விடுதிக்கு வரவைப்பதாகவும், உரிய ஆவணங்கள் இல்லையென்றாலும் தங்க வைப்பதாகவும், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என குறைந்த நேர வாடகைக்குக்கூட அறைகளை வாடகைக்கு விட்டுப் பணம் சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் தான் ராஜ்குமாரிடம் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாத நிலையில், அவருக்கு வாடகைக்கு அறை கொடுக்கப்பட்டுள்ளது. இவர் விடுதியில் தூக்கிட்டு இறந்த விவகாரம் வெளியே தெரிந்தால், விடுதிக்கு யாரும் வரமாட்டார்கள், ஐந்து ஆண்டு கிடைத்த வருமானம் கிடைக்காமல் போய்விடும் என நினைத்து, இத்தகைய செயலை செய்துள்ளதாகவும் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இவை அனைத்தையும் செய்துவிட்டு, ஒன்றும் தெரியாதது போல், விடுதி மேலாளர் பீர் முகமது, தனது சொந்த ஊரான தென்காசிக்கும், ரூம் பாய் ரவி, தனது சொந்த ஊரான ஆந்திராவிற்கும் சென்றுள்ளனர்.

பின்னர் மீண்டும் ஒன்பதாம் தேதி அன்று காலை விடுதிக்குச் சென்ற பீர் முகமது, ராஜ்குமாரின் உடல் கிடைக்கிறதா என பார்த்துள்ளார். வீசிய இடத்திலேயே அழுகிய நிலையில் உடல் இருந்ததைக் கண்ட பீர் முகமது, நாம் சிக்கி கொள்ள மாட்டோம் என நினைத்து, எழும்பூர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். ஆனால், காவல் துறையினரின் விசாரணையில் வசமாக சிக்கிக்கொண்டார்.

இதையடுத்து ஆந்திராவிற்குச் சென்ற ரூம் பாய் ரவியையும் நம்பும்படி பேசி, சென்னைக்கு வரவழைத்த காவல் துறையினர், விடுதி மேலாளர் பீர் முகமது, ரூம் பாய் ரவி ஆகியோரைக் கைது செய்தனர். இதையடுத்து விடுதியிலுள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர்.

சிசிடிவி பதிவுகள்

அதில், ராஜ்குமார் அறையின் உள்ளே சென்று தாழ் இட்ட பிறகு வெளியே வராததும், அதிகாலையில் ரூம் பாய் சென்று கதவை தட்டும் காட்சிகளும் பதிவாகியுள்ளதை வைத்து ராஜ்குமார், தனக்குத்தானே தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து உள்ளது தெரிய வந்ததாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கைதான விடுதி மேலாளர் பீர் முகமது, ரூம் பாய் ரவி ஆகியோர் மீது 177- பொய்யான தகவல்களைத் தருதல், 201-சாட்சியத்தை மறைத்தல், 202- குற்றம் பற்றிய தகவல்களை தராமல் உள்நோக்கத்தோடு மறைத்தல், 203 - புரியப்பட்ட குற்றத்தின் பொருட்டு பொய்யான தகவல்களை அளித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இவர்கள் இருவரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் முன்நிறுத்தினர். பின்னர் இவர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து ராஜ்குமாரின் உடலை விஷ்ரா சோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மருமகளின் படிப்பை தொடர உதவிய மாமியார் - கடுப்பான மகன் செய்த கொடூரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.