தமிழ்நாட்டில் ரவுடிகள் இடையே முன்பகை காரணமாக மோதல் ஏற்பட்டு கொலை, கொள்ளை, உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இதனைத் தடுக்கும் வகையில் ஸ்டாமிங் ஆப்ரேஷன் என்ற பெயரில் கடந்த 23 ஆம் தேதி முதல் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தீவரமாகக் கண்காணித்து அதிரடியாகக் கைது செய்து வருகின்றனர்.
சோதனை - கைது
இந்த அதிரடி சோதனையில் புளியந்தோப்பு, காசிமேடு, மாதவரம், மணலி ஆகிய பகுதிகளில் காவல் துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அப்போது கத்திகளுடன் பதுங்கியிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளி சுரேஷ் (43), விமல் குமார் (21), ரத்தினம்(37), ரஞ்சித்(26), வெங்கடேசன் (51) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில் இவர்கள் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிப்பறி, நாட்டு வெடிகுண்டு வீச்சு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
பறிமுதல்
கடந்த இரண்டு நாள்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் இரண்டாயிரத்து 439 ரவுடிகளும், பழைய குற்றவாளிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் 257 ரவுடிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட 52 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் 19 குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 112 பேரிடம் எந்த குற்றங்களிலும் ஈடுபடக்கூடாது என நன்னடத்தை பிணை ஆணை பெறப்பட்டது.
இதையும் படிங்க: Storming Operation - தமிழ்நாட்டில் இதுவரை 3,325 பேர் அதிரடி கைது