சென்னை தாம்பரம் அடுத்த மன்னிவாக்கம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் சோட்டா என்கிற வினோத்(28). இவர் மீது ஓட்டேரி காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகளும், சோமமங்கலம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் , கொலை முயற்சி, பொது சொத்துகளை சேதப்படுத்தியது போன்ற 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் பல முறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு சேலையூர் பகுதியில் கொலை முயற்சியில் ஈடுப்படதற்காக சோட்டா என்கிற வினோத்தை சேலையூர் காவலர்கள் தேடி வந்தனர்.
இரண்டு வருடமாக தேடி வந்த நிலையில், வினோத்தின் தந்தை உடல்நலக் குறைவால் உயிரிழந்ததால் அவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அவர் வந்துள்ளார். இத்தகவலை அறிந்த சேலையூர் காவலர்லள், இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்த வினோத்தை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து சேலையூர் காவல் நிலையம் அழைத்து சென்று அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: எஸ்.பி.பி. உடலுக்கு அரசு மரியாதை - முதலமைச்சர் அறிவிப்பு!