ETV Bharat / state

விசாரணைக் கைதி மரணம் - பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் மீது குவியும் குற்றச்சாட்டுகள்!

author img

By

Published : Jun 13, 2022, 4:16 PM IST

கொடுங்கையூர் விசாரணைக் கைதி மரணம் தொடர்பான வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் ஏற்கெனவே பல முறை விசாரணைக்கு வருபவர்களிடம் விதிகளை மீறி, செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் மீது குவியும் குற்றச்சாட்டுகள்

சென்னை: கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட ராஜசேகரன் என்பவர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர், உதவி ஆய்வாளர் உள்பட ஐந்து காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

மேலும், குற்றவியல் நீதிபதி லட்சுமி தலைமையில் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் கொடுங்கையூர் எவரடி காலனி மூன்றாவது தெருவில் உள்ள காவல் பூத்தில் நீதிபதி லட்சுமி விசாரணை மேற்கொண்டார். அதன்பின் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் மரணம் தொடர்பான காவலர்கள் மற்றும் உயிரிழந்த ராஜசேகரனின் உறவினர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

ஜார்ஜ் மில்லரின் அத்துமீறல்கள்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது முதல் முறை அல்ல என்பது தெரியவந்துள்ளது. விசாரணைக்காக வரும் நபர்களிடம் சட்டவிரோதமாக கடுமையாக நடந்துகொள்வது ஏற்கெனவே பலமுறை நடந்தது தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த 2012ஆம் ஆண்டு பெண் ஒருவர் மாயமான விவகாரத்தில் காவல் துறை மற்றும் வழக்கறிஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் உள்பட மூன்று காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதேபோன்று 2013ஆம் ஆண்டு நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக, விசாரணைக்கு அழைத்து வந்த நபரிடம் விதிகளை மீறி நடந்துகொண்ட விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஜார்ஜ் மில்லர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இதில் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் கடந்து 2019ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

பல்வேறு குற்றச்சாட்டுகள்: இதுபோன்று விசாரணைக்கு வரும் நபர்களிடம் அவதூறாகவும் தாக்குதலில் ஈடுபடுவதாகவும், அவர் பணிபுரிந்த காவல் நிலையங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. மேலும் கடந்த ஆண்டு சென்னை முகப்பேரில் சேர்ந்த தயாளன் என்பவர் தனது சொத்துகளை அபகரிக்க காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் முயல்வதாகப் புகார் ஒன்றை, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ளார்.

கடந்து 2020ஆம் ஆண்டு சட்டவிரோதமாக மதுபானம் விற்ற விவகாரம் தொடர்பாக தேவேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டு , காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட நிலையில், காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தாக்கியதாக குற்றச்சாட்டு உள்ளது. காவல்துறை தரப்பில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட தேவேந்திரன் பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டதாக தெரிவித்ததையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

2018ஆம் ஆண்டு வாடகை வீட்டில் இருந்த தன்னைத்தாக்கி வெளியேற்றியதாக நடிகை வனிதா, ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் மீது விசாரணைக்கு வருபவர்களிடம் விதிகளை மீறி செயல்பட்டதாக காவல் நிலையத்தில் வழக்கும் மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் 2 வழக்குகளும், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவாக நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விசாரணைக் கைதி மரண வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.