சென்னை: அதிமுக ஆட்சி 2017-18ஆம் ஆண்டு போட்டித் தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 55,000 மடிக்கணினிகள் வழங்கப்படாமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, வழங்கப்படாமல் உத்திரவாத காலம் காலாவதி ஆகியதால் அரசுக்கு 68.51 கோடி ரூபாய் இழப்பு இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை கணக்குத்தணிக்கையில் தகவல்: '2017-18ம் ஆண்டு போட்டி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க அரசின் உத்தரவின் பேரில் ELCOT நிறுவனம் சார்பில், 2018 ஜனவரியில் 60,000 மடிக்கணினிகள் ரூ.12,370 என்ற விதத்தில் கொள்முதல் செய்யப்பட்டது. ஆயினும் கொள்முதல் செய்யப்பட்ட 60 ஆயிரம் மடிக்கணினிகளில் 8,079 மடிக்கணினிகள் மட்டுமே போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
55 ஆயிரம் மடிக்கணினிகள் இருப்பில் இருந்த போதிலும், தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்க எந்த நடவடிக்கையும் அப்போதைய பள்ளிக்கல்வித்துறை ஆணையர் மேற்கொள்ளவில்லை. மேலும் ஆகஸ்ட் 2020ல் இந்த லேப்டாப் உடைய பேட்டரிகள் உத்தரவாதம் காலாவதி ஆகிவிட்டது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் 68.71 கோடி மதிப்பிலான மடிக்கணினிகளால் அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்பட்டுள்ளதாக' சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி விழுக்காட்டினை அதிகரிப்பதற்கான திட்டத்தைப் பயனற்ற முறையில் செயல்படுத்துதல்: 'ஜனவரி 2016இல் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் பின்தங்கிய நிலையில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தேர்வு முடிவுகளை மேம்படுத்தும் நோக்கில் GOTN தமிழ்நாடு எக்செல்ஸ் (TANEX) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. TANEX திட்டத்தின் கீழ் 5 மாவட்டங்களில் 1409 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்தல் பாட வல்லுநர்கள் மூலம் தரமான பாடத்தொகுதி தயாரித்தல் மாணவர்களுக்கு கல்விக்கான பொருட்களை இலவசமாக வழங்குதல், வார இறுதி வகுப்புகள், அலகுத் தேர்வுகள் மற்றும் பாடத்தொகுதி தேர்வுகளை நடத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் செயலாக்கத்தில் அடங்கும்.
பதிவேடுகளை ஆய்வு செய்தல் TANEX செயல்படுத்தும் நோக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களுக்கு 39.64 லட்சம் அளிக்கப்பட்டதும் சான்றிதழ்கள் வழங்கப்படுள்ளதும் கண்டறியப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களில் இரண்டில் தேர்ச்சி விழுக்காட்டினை மேம்படுத்துவதில் இத்திட்டம் பயனளிக்கவில்லை.
இந்த இரண்டு மாவட்டங்களிலும் செயல் திறனை மேம்படுத்த, கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் 2016-2017ஆம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தைத் தவிர மற்ற ஆண்டுகளில் இரண்டு மாவட்டங்களிலும் தேர்ச்சி விழுக்காடு குறைந்துள்ளது' என்பதை தணிக்கை கண்டறிந்தது.
இந்த மாவட்டங்களில் அதிகப்படியான காலியிடங்கள் இருப்பதால் தேர்ச்சி விழுக்காடு குறைந்துள்ளதாக பதில் அளித்த அரசு, 2022 ஆகஸ்ட்டில் காலியிடங்களை குறைக்க இந்த மாவட்டங்களில் புதிய ஆட்கள் நியமிக்கப்பட்டு வருவதாக கூறியது முக்கிய பிரச்னைக்கான ஆசிரியர் காலிப் பணியிடம் இருப்பதை காட்டாமல், TANEX திட்டத்தை செயல்படுத்தியதில் அந்தத் திட்டம் மிகக் குறைந்த பலன் கொடுத்து தோல்வியுற்றதாக தணிக்கை கருதுகின்றது.
இதையும் படிங்க: பட்டியலினத்தவருக்கான 60% வீடுகள் இலக்கை அடையமுடியவில்லை - தணிக்கைத் துறை