ETV Bharat / state

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? - CHANCE OF RAIN IN ONE OR TWO PLACES IN SOUTH TAMIL NADU AND NORTH TAMIL NADU DISTRICTS

இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

according-to-rmc-rain-in-which-district-for-next-four-days-in-tamil-naduதமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு எந்த மாவட்டங்களில் மழை பெய்யும் ?
according-to-rmc-rain-in-which-district-for-next-four-days-in-tamil-nadu தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு எந்த மாவட்டங்களில் மழை பெய்யும் ?
author img

By

Published : Apr 16, 2022, 6:42 PM IST

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் மேலடுக்குச்சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்று (ஏப்ரல்.16) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (ஏப்ரல்.17) மற்றும் நாளை மறுநாள் (ஏப்ரல்.18) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" எனத் தெரிவித்துள்ளது.

மழை
மழை

இதனிடையே, சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 19 மழை நிலவரம்: தென் தமிழ்நாடு, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்ரல் 20 மழை நிலவரம்: கடலோர தமிழ்நாடு மற்றும் மேற்குத்தொடர்ச்சியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: திமுக அரசின் நிர்வாக திறமையின்மையால் அரசுக்கு இழப்பு - ஈபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.