சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதில், 'தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 24 ஆயிரத்து 739 பேருக்கு கரோனா தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
இதன்மூலம் இந்தோனேஷியா, குவைத் நாடுகளிலிருந்து வந்த தலா ஒருவருக்கும், கர்நாடகாவில் இருந்து வந்த ஒருவருக்கும், தமிழ்நாட்டில் ஆயிரத்து 458 நபர்களுக்கும் என ஆயிரத்து 461 நபர்களுக்குப் புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 58 லட்சத்து 89ஆயிரத்து 511 பேருக்கு கரோனா தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 34 லட்சத்து 69 ஆயிரத்து 805 பேர் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 8 ஆயிரத்து 222 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 697 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தர்மபுரி மற்றும் சிவகங்கை மாவட்டம் தவிர அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக 543 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 240 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 181 நபர்களுக்கும், கன்னியாகுமரியில் 62 பேருக்கும், திருவள்ளூரில் 75 பேருக்கும் என ஆயிரத்து 461 நபர்களுக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்!