ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 16,096 பேருக்கு கரோனா தொற்று உறுதி

author img

By

Published : Feb 1, 2022, 9:05 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 96ஆக குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று
கரோனா தொற்று

சென்னை: தமிழ்நாட்டின் கரோனா பாதிப்பு விவரங்கள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பிப்ரவரி 1ஆம் தேதிக்கான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதில், 'தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஒரு லட்சத்து 22ஆயிரத்து 120 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்த 16ஆயிரத்து 93 நபர்களுக்கும், வெளிநாடுகளிலிருந்து வந்த மூன்று நபர்கள் என 16ஆயிரத்து 96 நபர்களுக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 8 லட்சத்து ஆயிரத்து 947 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் 33 லட்சத்து 61 ஆயிரத்து 316 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 599 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் குணமடைந்து 25ஆயிரத்து 592 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31 ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 118ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 21 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 14 நோயாளிகள் என 35 நோயாளிகள் இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 599ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் புதிதாக 2ஆயிரத்து 348 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆயிரத்து 897 நபர்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 308 நபர்களுக்கும், திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரத்து 297 நபர்களுக்கும், ஈரோடு மாவட்டத்தில் 924 நபர்களுக்கும், சேலம் மாவட்டத்தில் 851 நபர்களுகளுக்கும் கரோனா பாதிப்பு காணப்படுகிறது.

மாநிலத்தில் புதிதாக பரிசோதனை செய்து பார்ப்பவர்களின் எண்ணிக்கை 14.8 விழுக்காடு குறைந்துள்ளது.

ஆனால், அதே நேரத்தில் திருப்பூர் மாவட்டத்தில் 26 விழுக்காடு நபர்கள் பாதிக்கப்படுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22.5 விழுக்காடு நபர்களுக்கும் சேலம் மாவட்டத்தில் 1.5 விழுக்காடும் நபர்களுக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 22.5 விழுக்காடு நபர்களுக்கும், ஈரோடு மாவட்டத்தில் 21 விழுக்காடு நபர்களுக்கும் புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: '2022-2023 பட்ஜெட் நனைந்து போன பட்டாசு...; ஏமாற்றம் தரும் பட்ஜெட்' - தமிழ்நாடு கட்சித் தலைவர்கள் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.