ETV Bharat / state

வடபழனி முருகன் கோயில் விவகாரம் - மாநகராட்சி பொறியாளர் மீது நடவடிக்கை! - chennai latest news

வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அனுமதி பெறாமல் கட்டுமானங்களை மேற்கொண்ட சென்னை மாநகராட்சி பொறியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடபழனி முருகன் கோயில் விவகாரம்
வடபழனி முருகன் கோயில் விவகாரம்
author img

By

Published : Sep 9, 2021, 4:48 PM IST

சென்னை : வடபழனியை சேர்ந்த என்.ஜி.தெய்வகடாட்சம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ”வடபழனி நெற்குன்றம் பாதையில் அமைந்துள்ள 2 ஆயிரம் சதுர அடி நிலம் வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமானது.

அதில், கட்டுமானங்களை மேற்கொள்ள அறநிலையத்துறையிடம் அனுமதி பெறாமல், சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டல செயற் பொறியாளர் வி.பெரியசாமி 47 லட்ச ரூபாய் மதிப்பிலான இரு கட்டடங்களை கட்டியுள்ளார்.

அந்த கட்டடங்களில் அம்மா உணவகம், நியாய விலை கடை ஆகியவை இயங்கி வருவதாகவும், சென்னை குடிநீர் வாரியம், மின் வாரியம் ஆகியவற்றின் அலுவலகங்கள் அமைந்திருப்பதாக பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. குத்தகை காலம் 2015ஆம் ஆண்டு முடிந்த நிலையிலும், அம்மா உணவகமும், நியாய விலை கடையும் தொடர்ந்து இயங்கி வருகிறது.

இதுதொடர்பாக, பொறியாளர் பெரியசாமி மீது நடவடிக்கை எடுக்கும்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு, இந்துசமய அறநிலையத்துறை, சென்னை மாநகராட்சி ஆகியோரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, தெய்வகடாட்சம் அளித்த புகாரில் விசாரணை தொடங்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடந்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி, குற்றச்சாட்டுக்கு உள்ளான பொறியாளர் பெரியசாமி விளக்கம் அளிக்க வாய்ப்பளித்து, விசாரணையை முடித்து சட்டத்திற்குட்பட்டு நான்கு வாரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி அறநிலையத்துறை இணை ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க : மழை காலத்திற்கு தயாராகும் அரசு - பராமரிப்பு பணிகளை முடிக்க தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.