துபாயிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் மீட்பு விமானம் நேற்று நள்ளிரவு சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்தது. அதில் வந்த 146 மீட்பு பயணிகளை சுங்கத்துறையினா் சோதணையிட்டனா்.
அப்போது இராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டிணத்தை சோ்ந்த சாகுல் ஹமீது(40), கலந்தா் ஆயூப்கான்(23) ஆகிய இருவா் மீதும் சுங்கத்துறை அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரின் உடமைகளை முழுமையாக சோதித்தனர். மேலும் தனி அறைகளுக்கு அழைத்து சென்றும் சோதனை நடத்தினர்.
அப்போது இருவரின் உள்ளாடைகள் மற்றும் பைகளில் தங்க பேஸ்ட்கள், தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இருவரிடமிருந்து 1.11கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
அதன் சர்வதேச மதிப்பு ரூ.58.6 லட்சம். இதனைத்தொடர்ந்து இரண்டு மீட்பு பயணிகளையும் கைது செய்த சென்னை விமானநிலைய சுங்கத் துறை அலுவலர்கள், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.