இது தொடர்பாக, ஆவின் மேலாண்மை இயக்குநர் மா. வள்ளலார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கரோனா நோய்த் தொற்று காலத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி மக்களுக்கான சேவையில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது ஆவின். தமிழ்நாட்டில் 25 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் இருக்கின்றன. அவற்றின் மூலம் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு முன்பு, நாளொன்றுக்குச் சராசரியாக 28.50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக தனியார் பால் நிறுவனங்கள், பால் கொள்முதல் அளவு, பால் விலையைக் குறைத்துவிட்டனர். இதனால் பால் உற்பத்தியாளர்கள் சிக்கலில் தவித்தனர். இதனையடுத்து, அவர்களுக்கு உதவும் வகையில் 100 புதிய பால் கூட்டுறவுச் சங்கங்கள், 378 பால் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டன.
அதன் மூலம் 12,800 புதிய உறுப்பினர்களைப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு அமைப்புக்குள் கொண்டு வந்தது ஆவின் நிர்வாகம். இதனால் படிப்படியாக ஆவின் பால் கொள்முதல் அதிகரித்தது. இதனால், ஆவின் சாதனையில் மற்றொரு மைல்கல்லாக நேற்று 25 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் மூலம் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட நீதிமன்றம் - ஸ்டாலின் வரவேற்பு