ETV Bharat / state

'ஆவின் பால் கெடாமல் வழங்க முறையாகச் செயல்படுத்தப்படும் குளிரூட்டி நிலையங்கள்' - latest chennai news

ஆவின் பால் தரம் கெடாமல் வழங்க 591 குளிரூட்டும் நிலையங்கள் முறையாகச் செயல்படுத்தப்பட்டுவருவதாகப் பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்துள்ளார்.

ஆவின் பால்
ஆவின் பால்
author img

By

Published : Oct 1, 2021, 9:19 PM IST

சென்னை: திருமுல்லைவாயில் அருகே தமிழ்நாடு சிறப்புக் காவல்படை காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு ஆவின் பால் விற்பனை நிலையம் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது.

இதனை சா.மு. நாசர் இன்று (அக்.1) திறந்துவைத்தார். அப்போது செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய அவர், "தமிழ்நாட்டில் ஆவின் பால் தரம் குறித்து 2019 எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் இந்த ஆய்வறிக்கை தற்போது எடுக்கப்பட்டதுபோல் வதந்திகள் வருகின்றன.

பால்வளத் துறை அமைச்சர்

இது உண்மைக்குப் புறம்பான செய்தி. கடந்த ஆட்சியிலிருந்த ஆவின் பாலைவிட இந்த ஆட்சியில் ஆவின் பாலின் தரத்தை உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. ஆவின் பால் பதம் மாறாமல் இருக்கத் தமிழ்நாடு முழுவதும் 591 குளிரூட்டும் நிலையங்களும் முறையாகப் பராமரிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

இதனால் ஆவின் பால் கெடுவதற்கு வாய்ப்பில்லை. பதப்படுத்தப்பட்ட பால் ஆவின் பால் உபபொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலை தொடர்கிறதா? -சிஎம்டிஏ பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.