சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்திலுள்ள அனைத்து ஆவின் பாலகங்கள் மூலம் 5 வகையான இனிப்புகள் அடங்கிய தொகுப்பு (Combo Box) ரூ.450-க்கு விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மக்களுக்குப் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் ஆவின் ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் மூலம், பதப்படுத்தப்பட்டு ஆரஞ்சு, பச்சை, நீல நிறம் எனப் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்ளிட்ட 225 வகையான பொருட்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாகத் தயாரிக்கப்பட்டு, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
இதையும் படிங்க: கம்பேக் கொடுத்த 'காதல் மன்னன்' நாயகி மானு.. நடிகர் அஜித் குறித்து புகழாரம்!
இந்நிலையில், இந்த ஆண்டின் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் சிறப்பு இனிப்பு வகைகள், கார வகைகள் விற்பனையை ஆவின் நிறுவனம் தொடங்கி உள்ளது. குறிப்பாகப் பண்டிகை காலத்தில், பால்கோவா, மைசூர்பாகு, குலாப்ஜாமுன், ரசகுல்லா, காஜூ கட்லீ, காஜூ பிஸ்தா போன்றவை இனிப்புகள் அதிக அளவில் விற்பனை ஆகும்.
இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்யப்பட்ட ஆவின் இனிப்பு வகைகள் பொது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தீபாவளி 2023ஆம் ஆண்டு பண்டிகைக்கும் கீழ்க்கண்ட தரமான சிறப்பு இனிப்பு வகைகள் எவ்வித விலை மாற்றமும் இன்றி பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது என்று ஆவின் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க: உடல் எடையை குறைக்கணுமா? முதல்ல இந்த 5 வகையான டீயை குடிங்க!
காம்போ பேக் (Combo Box)
1) காஜூ கட்லீ (250 கி) -ரூ.260.00
2) நட்ஸ் அல்வா (250 கி) -ரூ.190.00
3) மோத்தி பாக் (250 கி) -ரூ.180.00
4) காஜு பிஸ்தா ரோல் (250 கி) -ரூ.320.00
5) நெய் பாதுஷா (250 கி) -ரூ.190.00
இந்த 5 வகையான இனிப்புகள் அடங்கிய தொகுப்பு (Combo Box) 500 கிராம் -ரூ.450க்கு ஆவின் பாலகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும். மேலும், இனிப்பு வகைகள் அனைத்தும் அக்டோபர் 10ஆம் தேதி முதல் அனைத்து ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வரப்போகுது பண்டிகைக்கால விற்பனை... ஆன்லைனில் வாங்க இது சரியான வாய்ப்பா?