ETV Bharat / state

14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கவும்: ஆம் ஆத்மி - TN aap leader

சென்னை: 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்று ஆம் ஆத்மி தமிழ்நாடு தலைவர் வசீகரன், போக்குவரத்து முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனை சந்தித்து மனு அளித்துள்ளார்.

vaseekaran
author img

By

Published : Aug 5, 2019, 1:58 PM IST

தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்தின் 14ஆவது ஊதிய ஒப்பந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு தலைவர் வசீகரன், தமிழ்நாடு போக்குவரத்து முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஆம்ஆத்மி கட்சித் தலைவர் வசீகரன், "போக்குவரத்து, தொலைத்தொடர்பில் எந்த நாடு முழுமை பெறுகிறதோ அந்த நாடு தான் வளர்ந்த நாடாகும். நேற்று தஞ்சையில் பத்து மணிக்கு முன்னதாகவே அரசு பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டது. ஆம்னி பேருந்துகள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சதி நடைபெற்று வருகிறது, என்றார்.

14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கவும்

மேலும், 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என்றும் மூன்று வருடங்களுக்கு முன் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கே ஒன்றரை ஆண்டுகள் கடந்தன. அதனால் இந்த ஆண்டிற்கு வருகின்ற 1ஆம் தேதி முதல் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே போக்குவரத்து செயலாளரை சந்தித்தாகவும்" அவர் தெரிவித்தார்.

Intro:Body:ஆம் ஆத்மி வசீகரன் போக்குவரத்து துறை செயலரை சந்தித்த பின்னர் தலைமைச் செயலகத்தில் அளித்த பேட்டி

தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தின் 14வது ஊதிய ஒப்பந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்ஆத்மிகட்சியின் தமிழக தலைவர் திரு.வசீகரன் தலைமையில் SVS-AAP தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தமிழக போக்குவரத்து முதன்மை செயலாளர் இராதாகிருஷ்ணனை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன்..

போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பில் எந்த நாடு முழுமை பெறுகிறதோ அந்த நாடு தான் வளர்ந்த நாடாகும் என்றும்
ஆனால் போக்குவரத்து துறை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும்
நேற்று தஞ்சையில் 10மணிக்கு முன்னதாகவே அரசு பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டதாகவும்
ஆம்னி பேருந்துகள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சதி நடைப்பெற்று வருகிறது என்றும் குற்றம்சாட்டினார்

மேலும் பணிமனையை முறையாக பராமரிப்பது இல்லை என்று தெரிவித்த அவர் அதனால் தான் வடபழனியில் இருவர் உயிரிழந்தனர் என்றும் கூறினார்.

14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என்றும்
3 வருடங்களுக்கு முன் இந்த பேச்சுவார்த்தை நடத்தவே ஒன்றரை ஆண்டுகள் ஆனதாகவும்,
வருகின்ற 1ம் தேதி முதல் பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே போக்குவரத்து செயலாளரை சந்தித்தாகவும் அவர் தெரிவித்தார்.

அரசு பட்ஜெட்டில் போக்குவரத்திற்கு தனித்தொகை ஒதுக்கீடு செய்து இழப்பீட்டு தொகையை சரி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும்
, 5000 தொழிலாளர்கள் வேலை செய்யாமலேயே சம்பளம் வாங்கி வருகின்றனர் அதற்கு ஆதாரம் இருப்பதாகவும்,
ஓய்வு பெற்றவர்களுக்கு பணி பலன்கள் அளிப்பதில்லை என்றும் ,
தனியார் ஆம்னி பேருந்துகளை தான் காப்பாற்ற நினைகின்றனர் எனபவும் இதை தமிழக அரசு கவனிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.