இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களது ஆதார் எண்ணை ஒருமுறை பதிவு அல்லது நிரந்தர பதிவில் கண்டிப்பாக இணைக்க வேண்டும். இனிவரும் காலங்களில் ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே ஹால் டிக்கெட் பெற முடியும். ஜனவரியில் நடைபெறும் குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணை இணைத்த பிறகே இதனை பதிவிறக்கம் செய்ய முடியும். இதுகுறித்த சந்தேகங்களுக்கு தேர்வாணையத்தின் 180042510002 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் ஜனவரி 8ஆம் தேதி வரை தொடர்புகொள்ளலாம். மின்னஞ்சல் மூலமும் தொடர்புகொண்டு உரிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
OMR விடைத்தாள் பல சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை கையாளும் முறை குறித்த விளக்க குறும்படமும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இதை கருத்தில் கொண்டு சரியான முறையில் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் தயங்காமல் புகார் அளியுங்கள்: தமிழ்நாடு மின்சார வாரியம்