ETV Bharat / state

ஓட ஓட விரட்டி வெட்டி வாலிபர் படுகொலை; மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை, போரூர் அருகே வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஓட ஓட விரட்டி வெட்டி வாலிபர் படுகொலை
ஓட ஓட விரட்டி வெட்டி வாலிபர் படுகொலை
author img

By

Published : Apr 8, 2023, 10:54 AM IST

சென்னை: போரூரை அடுத்த அய்யப்பன் தாங்கல் சுப்பிரமணியம் நகர், பொன்னியம்மன் கோயில் தெருவில் சுமார் 23 வயது மதிக்கத்தக்க வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரை வெட்டுவதற்காக விரட்டியுள்ளனர். இதனால் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார்.

அப்போது சாலையில் இருந்த வேகத் தடையில் தடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார். இதை அடுத்து அவரை வெட்டுவதற்கு அந்தக் கும்பல் விரட்டியதால் உயிருக்குப் பயந்து அருகில் இருந்த வீட்டுக்குள் புகுந்து அந்த வாலிபர் கதவை மூடியுள்ளார். விடாமல் துரத்திச் சென்ற அந்தக் கும்பல் கதவை உடைத்து அந்த வாலிபரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். இதில் அந்த வாலிபரின் இரண்டு கைகளும் துண்டானது.

மேலும் வெட்டப்பட்ட நபர் யார் என்று அடையாளம் தெரியாத வகையில் முகத்தை வெட்டி சிதைத்து விட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போரூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் நடந்த இடத்திற்கு ஆவடி காவல் இணை ஆணையர் விஜயகுமார், துணை ஆணையர் பாஸ்கரன், உதவி ஆணையர்கள் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன், முத்துவேல்பாண்டி, இன்ஸ்பெக்டர்கள், மற்றும் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட வாலிபர் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார், கொலை செய்தவர்கள் யார், எதற்காக இந்தப் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட நபர் வந்த மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து அதன் மூலம் துப்பு துலக்கி வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வாலிபர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: தம்பி மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டீங்க.. வேலை செய்த கடையில் திருடிய வடமாநில இளைஞர் வசமாக சிக்கிய சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.