ETV Bharat / state

ஊரடங்கை மீறிய இளைஞர் - காவல் துறையினருடன் வாக்குவாதம்

சென்னை: போலியாக காவல் துறை என ஸ்டிக்கர் ஒட்டி, ஊரடங்கை மீறிய இளைஞர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police
police
author img

By

Published : Jun 29, 2020, 7:26 PM IST

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சதாம் உசேன். இவர், தனது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு அரிசி வாங்க சென்றார். அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த அரும்பாக்கம் காவல் துறையினர், அவரை இடைமறித்து விசாரித்தபோது அரிசி வாங்க செல்வதாகக் கூறியுள்ளார். அதற்கு காவல் துறையினர் அவரது வீட்டு முகவரியை கேட்டு, உங்களது வீட்டின் பக்கத்திலேயே கடை இருக்கிறது அங்கேயே வாங்கி கொள்ளலாமே, முழு ஊரடங்கு நேரத்தில் வெளியே வரலாமா என்று எனக் கேட்டதாக தெரிகிறது.

மேலும், அவரது வாகனத்தில் காவல் துறை என ஸ்டிக்கர் ஒட்டியதைக் கண்டு விசாரித்தபோது, சதாம் உசேன் காவல் துறை இல்லை என்பது தெரியவந்தது. இதனால், முழு ஊரடங்கை மீறியதற்காக அவரது இருசக்கர வாகனத்தை அரும்பாக்கம் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதனால், சதாம் உசேன் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்யவிடாமல் காவல் துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இளைஞர் காவல் துறையுடன் வாக்குவாதம்

அதுமட்டுமின்றி, சாலையில் அமர்ந்து தர்ணா செய்து கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து, காவல் துறையினர் அவரை குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல் துறை துணை ஆணையர் முத்துசாமி, சதாம் உசேனிடம் விசாரணை நடத்தினார்.

இதன்பின்னர், காவல் துறையினர் அந்த நபரை தாக்கவில்லை விதிகளுக்குட்பட்டே வாகனத்தை பறிமுதல் செய்தோம். ஆனால், அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிரச்னை செய்ததால் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றபோது அவர் மறுத்தார். அதன் பிறகு தன் மீதான தவறை ஒப்புக்கொண்டு எழுதி கொடுத்துவிட்டு சென்று விட்டார்" என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெளியிடப்பட்ட புதுச்சேரி முதலமைச்சரின் கரோனா பரிசோதனை முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.