ETV Bharat / state

சிறுமியை மணமுடித்து பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது!

சென்னை: சிறுமியை திருமணம் செய்துகொண்டு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது  சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது  சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்குகள்  A young man who married a girl and sexually abused her has been arrested in Pocso  Pocso arrested  child sexual abuse Cases  Youth arrested for sexually abusing girl
A young man who married a girl and sexually abused her has been arrested in Pocso
author img

By

Published : Jan 29, 2021, 7:04 PM IST

சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (27). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். பிரவீன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.

அங்கு எண்ணூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் மாமாவின் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு வந்துசென்றுள்ளார். அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதையறிந்த சிறுமியின் தாயார் சிறுமியைக் கண்டித்து வீட்டைவிட்டு வெளியே அனுப்பாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் தேரடி பகுதியில் உள்ள மாமா வீட்டு நிகழ்ச்சிக்குச் சென்றுவருவதாக சிறுமி கூறிவிட்டு பிரவீனுடன் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த சிறுமியின் தாயார் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் மகளைக் காணவில்லை எனப் புகார் அளித்தார்.

அதனடிப்படையில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, பெரும்பாக்கத்தில் பதுங்கியிருந்த அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், இருவரும் மேல்மருவத்தூர் கோயிலில் திருமணம் செய்துவிட்டு பெரும்பாக்கத்தில் உள்ள சிறுமியின் பழைய வீட்டில் பத்து நாள்களாக குடும்பம் நடத்திவந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பெண்ணிடம் பாலியல் வன்புணர்வு முயற்சி: காவல் துறை விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.