ETV Bharat / state

கரோனா அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்! - தற்கொலை சம்பவம்

சென்னை: கரோனா தொற்றால் மூன்று மாதத்திற்கு முன்பு பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்ட பெண் ஒருவர் தொற்று பயத்தினால் வீட்டினுள் துாக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

corona
corona
author img

By

Published : Dec 21, 2020, 12:01 PM IST

அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் அருகே லோகநாதன் தெருவைச் சேர்ந்தவர் ரகு (48). இவர் கேபிள் டிவி ஆபரேட்டர். இவரது மனைவி கீதா (46). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையில் கீதா கடந்த 3 மாதத்துக்கு முன்பு கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர், அவர் சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினார். அதன் பிறகும் அவர் கரோனா தொற்று அச்சத்தில் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

தற்கொலை

இந்நிலையில், நேற்று (டிச. 20) மாலை கீதா திருமுல்லைவாயல், தாமரை நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலுக்கு பூஜைக்கு சென்றுள்ளார். பின்னர், அவர் அங்கிருந்து மீண்டும் இரவு வீடு திரும்பியுள்ளார்.

இதையடுத்து நள்ளிரவு கோயில் இருந்து வீடு திரும்பிய ரகு, மனைவி கீதா மின்விசியில் தூக்கில் தொங்கியதைக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து அம்பத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் ராஜகுமார் தலைமையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.